Advertisment

SBI-ன் இந்த ஆஃபரை கவனிச்சீங்களா? வீட்டில் இருந்தபடி ரூ3 லட்சம் வரை டூ வீலர் லோன்!

SBI offers Two wheeler loan via Yono app in tamil: எஸ்பிஐ –ன் பண்டிகை கால ஆஃபர்; வீட்டிலிருந்தப்படியே இருசக்கர வாகன கடன்; முழுமையான தகவல்கள் இதோ...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI new rules, SBI cash withdrawal

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு தனது டிஜிட்டல் தளமான SBI YONO ஐ மேலும் மேம்படுத்தும் நோக்கில் ‘ஈஸி ரைடு’ முன் அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ யோனோ செயலி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தால், எஸ்பிஐ ரூ.3 லட்சம் வரை எளிதாக முன்-அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன்களை வழங்குகிறது.

Advertisment

எஸ்பிஐ ஏற்கனவே வீட்டுக் கடன்களை ஆன்லைனில் அல்லது YONO செயலி மூலம் விண்ணப்பித்தால் 5 அடிப்படைப் புள்ளிகள் தள்ளுபடியை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். SBI இன் படி, டிஜிட்டல், முன்-அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன்கள் அனைத்து SBI வாடிக்கையாளர்களுக்கும் கிளைக்குச் செல்லாமல் YONO செயலி மூலம் கிடைக்கும் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ.3 லட்சம் வரையிலான இரு சக்கர வாகனக் கடனையும், குறைந்தபட்சம் ரூ. 20,000 கடனையும், ஆண்டுக்கு 10.5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை கடன் பெறலாம். முன்-அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளரின், தவணைக்காலம் 48 மாதங்கள் மற்றும் சராசரி EMI ஒரு லட்சத்திற்கு ரூ. 2,560 ஆக இருக்கும் எனில், ஆன்-ரோடு விலையில் 85 சதவீதம் வரை பெறலாம். கடன் தொகையானது டீலரின் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

"எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மற்றும் தொந்தரவில்லாத வங்கி அனுபவத்தை வழங்குவதே எங்களது நிலையான முயற்சி" என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறினார். YONO மூலம், SBI வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் வங்கி மற்றும் வாழ்க்கை முறை சேவைகளை வழங்குகிறது. நவம்பர் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, YONO 89 மில்லியன் பதிவிறக்கங்களையும் 42 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களையும் கண்டுள்ளது. எஸ்பிஐ 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 110க்கும் மேற்பட்ட இணையவழி நிறுவனங்களுடன் YONO வில் கூட்டு சேர்ந்துள்ளது.

இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்தில், எஸ்பிஐ தனது சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் செயல்முறை மற்றும் திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐ பார்வையிடலாம். செப்டம்பரில் எஸ்பிஐ ஒரு ட்வீட்டில், "SBI வழங்கும் கார் கடன், தங்கக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றில் சிறப்பு சலுகைகளுடன் பண்டிகை கொண்டாட்டங்களைத் தொடங்குங்கள். இன்றே தொடங்குங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்: sbiyono.sbi." என பதிவிட்டிருந்தது.

எஸ்பிஐ ஒரு லட்சத்துக்கு ஒரு தவணை ரூ.1,539 க்கு கார் கடனையும், 7.5 சதவீத வட்டியில் தங்கக் கடனையும், ஒரு லட்சத்துக்கு ரூ.1,832க்கு தனிநபர் கடனையும் வழங்குகிறது.

இந்த பண்டிகைக் காலத்தில் எஸ்பிஐ, கடன் தொகையைப் பொருட்படுத்தாமல் 6.7% இல் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களை வழங்குகிறது. முன்னதாக ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி 7.15% ஆக இருந்தது. இந்த சலுகை 45 அடிப்படை புள்ளிகளை (1%=100 bps) தகுதியான வாடிக்கையாளர்களின் கடனில் இருந்து குறைக்கும் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Yono App Sbi Bank Loan Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment