Tamil Business SBI Bank offers two-wheeler loan Update : இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டேட் வங்கி இருசக்கர வாகனங்களுக்கு மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இந்த கடன் திட்டத்தில், ரூ. 10000-க்கு ரூ கடனுக்கு மாத தவனையாக ரூ 256- மட்டுமே வசூலிக்கிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இருசக்கர வாகனங்களுக்காக கடன் பெறுவது எளிமையாகிவிட்டது. பைக் அல்லது ஸ்கூட்டருக்கான லோனை எஸ்.பி.ஐ. யோனோவின் செயலி மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
”உங்கள் கனவுப் பயணத்திற்கு தயாராகுங்கள்! யோனோ மூலம் உங்கள் இரு சக்கர வாகனத்திற்கு முன்-அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ ஈஸி ரைடு கடனைப் பெறுங்கள்” என்று எஸ்பிஐ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு விருப்பமான நேரத்தில் யோனோ செயலி மூலம் எப்போது வேண்டுமானாலும் ப்ரீ அப்ரூவ்ட் இருசக்கர வாகன கடனை பெறுங்கள் என்று எஸ்.பி.ஐ கூறியுள்ளது. வரையறுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வண்டி வாங்க கடன்களை வழங்குகிறது வங்கி.
இருசக்கர வாகனத்திற்கான கடன் எவ்வளவு வழங்கப்படுகிறது?
ரூ. 20 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை இரு சக்கர வாகனங்களுக்கான வங்கிக் கடன்களை வழங்குகிறது. இந்த கடனை வாடிக்கையாளர்கள் 48 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும்.
இதற்கான வட்டி எவ்வளவு?
இருசக்கர வாகனங்களுக்கான கடனை எஸ்.பி.ஐ மிகவும் குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த கடன்களுக்கு ஆண்டுக்கு 10.50% வட்டியை வசூலிக்கிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 85%-த்தை கடனாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இந்த எஸ்பிஐ வங்கியில் தங்களுக்கான கடனை பெற வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil