Advertisment

வாசற்படியை தாண்ட வேண்டாம்... முக்கால் மணி நேரத்தில் கடன்: எஸ்பிஐ அதிரடி

SBI News: அவசர கடனை நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால் அக்டோபர் வரை நீங்கள் மாத தவணை கட்ட தேவையில்லை. உங்கள் மாத தவணை 6 மாதத்துக்கு பிறகு தான் தொடங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI, online sbi, sbi loan, sbi home loan, personal loan, sbi education loan, home loan, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil,

SBI, online sbi, sbi loan, sbi home loan, personal loan, sbi education loan,state bank of india loan,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எஸ்பிஐ, வீட்டுக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன்

SBI Loan News In Tamil: கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த நாடும் ஒரு மோசமான காலகட்டத்தில் உள்ளது. இன்னும் பெரும்பாலான கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளன. இந்த கோவிட் -19 காரணமாக நடுத்தர மக்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் பொருளாதார நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது. சிலர் வாழ்வாதாரத்தைக் கூட இழந்துவிட்டனர்.

Advertisment

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

இருப்பினும் ஏதாவது காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் கவலைப் படவேண்டாம் பாரத ஸ்டேட் வங்கி உங்களுக்கு உதவுவதற்காக அவசர கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நீங்கள் எந்த எஸ்பிஐ வங்கி கிளைக்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

6 மாதத்துக்கு மாத தவனை கட்ட வேண்டியதில்லை

கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக எஸ்பிஐ இந்த கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதால் முதல் 6 மாதங்களுக்கு மாத தவனை கட்ட வேண்டாம் என்ற ஒரு வாய்ப்பை வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது மே மாதத்தில் இந்த அவசர கடனை நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால் அக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை. உங்கள் மாத தவனை 6 மாதத்துக்கு பிறகு தான் தொடங்கும்.

வட்டி விகிதம்

எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த தனிநபர் அவசர கடனை எடுக்கலாம். இந்த அவசரக் கடன் ஆண்டுக்கு 7.25 சதவிகிதம் என்ற வட்டி விகதத்தில் கிடைக்கிறது.

நீங்கள் எவ்வளவு கடன் வாங்க முடியும்

தனிநபர் கடன் : ரூபாய் 2 லட்சம் வரை.

ஓய்வூதிய கடன் : ரூபாய் 2.5 லடசம் வரை

சேவை வகுப்பு (Service Class) : ரூபாய் 5 லட்சம் வரை.

தனிநபர் அவசர கடன் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் PAPL எண்ணை தட்டச்சு செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தட்டச்சு செய்து அதை 567676 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்

நீங்கள் கடன் பெற தகுதியானவரா இல்லையா என்பதை வங்கி தெரிவுக்கும்.

தகுதியான நபர்கள் 4 செயல்முறையில் கடன் பெறுவார்.

எஸ்பிஐ ஆப்பான YONO SBI ல் Avail Now விருப்ப தேர்வை செடுக்கவும்.

அடுத்து நீங்கள் கடன் காலம் மற்றும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளீடு செய்ததும் பணம் உங்கள் வங்கி கணக்கில் தானாக வரவு வைக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment