/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-46.jpg)
bank loan
sbi online account : லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கியின் தொடர் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அறிவித்த அறிவிப்பு புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும் என்பது தான்.
இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு பெருமளவில் கைக்கொடுக்கும். அதே போல், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ளவும் உதவும். தற்போது வரை வங்கியில் உங்களது மொபைல் எண்களை இணைக்காதவர்கள் உடனே இந்த பணியை செய்து முடித்து விடுங்கள். அதுமட்டுமில்லை உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி சென்றால் தான் உங்களால் ஏடிஎம்-களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை 10,000 ரூ. மேல் பணம் எடுக்க முடியும் ஞாபகம் இருக்கிறதா?
sbi online account : மொபைல் எண்ணை எப்படி சேர்ப்பது?
1. எஸ்பிஐ வங்கி இணைய சேவையை லாகின் செய்ய வேண்டும்.
2. பின்பு அதில், மை அக்கவுன்ட்ஸ் புரஃபைல் ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
3. அதன் பின்பு, புரஃபைல் லிங்கை க்ளிக் செய்து வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விவரம் மற்றும் மொபைல் எண்ணை பகுதிக்கு க்ளிக் செய்ய வேண்டும்.
4. அதனைத் தொடர்ந்து திருத்து பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு உங்களது மொபைல் எண்ணை அதில் பதிவு செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.