SBI Online Banking: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான State Bank of India, என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வந்த கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
Advertisment
இதன் மூலம் யோனோ (Yono) மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் எனக்கூறப்பட்டது. ரிசர்வ் வங்கி என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு வங்கிகளிடம் குறைந்தபட்ச கட்டணம் பெற்றுவருகிறது.
வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தாங்கள் வழங்கும் கட்டணத்தை ஈடுசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன.
ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் தி டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
அனைத்து வங்கிகளும் இந்த கட்டண ரத்து மூலம் கிடைக்கும் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் எஸ்பிஐ முதலாவதாக இந்த முடிவை எடுத்து அதை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கும் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை செய்துக் கொள்ளலாம்.