SBI online banking SBI net banking SBI app state bank of India : உங்கள் ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லையா? உடனடியாக சார்ஜ் செய்ய வேண்டுமா? பப்ளிக் சார்ஜிங் ஸ்டேசன் இருக்கிறதே அங்கு வந்து சார்ஜ் செய்து கொள்ளுங்கள் என்று ஆங்கேங்கே விளம்பரங்கள் வருகின்றன. அது பார்ப்பதற்கு மிகவும் நல்ல திட்டமாக இருந்தாலும் கூட அது உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரிக்கை செய்கிறது எஸ்.பி.ஐ.
ஜூஸ் ஜேக்கிங் என்றால் என்ன?
ஜூஸ் ஜேக்கிங் என்பது ஹேக்கர்கள் யூ.எஸ்.பி சார்ஜிங் டிவைஸ் மூலமாக உங்கள் போனில் மல்வேரை பரப்பும் வகையாகும். ஏர்போர்ட், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், கெஃபேக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்யும் போது இந்த மல்வேர்கள் உள்ளே அனுப்பட்டுப்பட்டு அனைத்து டேட்டக்களையும் க்ளியர் செய்துவிடும். பெர்செனல் மற்றும் பர்சனல் தகவல்களை இந்த முறையில் பெற்றுக் கொள்ளும் ஹேக்கர்கள் அதற்கு விலையாக பணத்தினை கேட்டு மிரட்டுவார்கள்.
இதனை சரி செய்ய என்ன செய்யலாம்?
முடிந்தவரை பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் போர்ட்களில் எக்காரணம் கொண்டும் சார்ஜ் செய்ய வேண்டாம். அப்படியே சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை உருவானால் சார்ஜிங் ஸ்டேசனை சரியாக பார்வையிட்ட பிறகு சார்ஜ் செய்யுங்கள்.
உங்களுடைய ஏ.சி.சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். யூ.எஸ்.பி. போர்ட்டினை பயன்படுத்தாமல் ஏ.சி. ப்ளக் பாய்ண்டினை மட்டும் பயன்படுத்தி உங்கள் போனை சார்ஜ் செய்யுங்கள்.
உங்களின் ஸ்மார்ட்போனை எக்காரணம் கொண்டும் முகம் தெரியாத நபர்களின் லேப்டாப்பில் சார்ஜ் செய்யாதீர்கள்.
முடிந்தவரை பவர்பேங்கினை பயன்படுத்துங்கள். டேட்டா ட்ரான்ஸஃபர்களாக இல்லாமல் வெறும் சார்ஜிங் ஃபெசிலிட்டியுடன் கூடிய கேபிள்களை பயன்படுத்துங்கள்.
யூ.எஸ்.பி. ப்ளாக்கர்களை பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போவதை தடுக்க இடலும்.
மேலும் படிக்க : உங்கள் போனின் நெட்வொர்க்கை மாற்றுவது இனி மேலும் சுலபம் : ட்ராயின் புதிய விதிமுறைகள்