SBI online KYC form update : கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி கூடுதலாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு முகவரி (address) மற்றும் இனம் காணும் (identity proof) ஆவணத்தின் நகலை கொடுத்து கேஒய்சி ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
வருங்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்பதற்காக தங்களுடைய கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்துக் கொள்ளும்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களுடைய கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி கூடுதலாக தெரிவித்துள்ளது. கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு வங்கி எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கையும் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
எதற்காக எஸ்பிஐ இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுக்கிறது?
இந்திய அரசால் அவ்வப்போது திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 மற்றும் பண மோசடி தடுப்பு (பதிவேடுகள் பராமரிப்பு) விதிகள் 2005 ன் ( Prevention of Money-Laundering Act, 2002 and the Prevention of Money-Laundering (Maintenance of Records) Rules, 2005 ) படி ஒழுங்குப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு தொடங்கி அதன் மூலம் பண பரிவர்தனையை மேற்கொள்ளும் போது சில இனங்கண்டு கொள்ளும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் மேலும் அவர்களது பண பரிவர்தனையை கண்காணிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்பிஐ’ ன் இந்த வழிகாடுதல்களின்படி வங்கி தனது வாடிக்கையாளர்களின் கேஒய்சி தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்ய வேண்டும் மேலும் தங்களது கேஒய்சி தகவல்கள் காலாவாதியாகி விட்டன என்பதை தனது வாடிக்கையாளர்களுக்கும் வங்கி தெரிவிக்க வேண்டும்.
ஆர்பிஐ’ன் விதிகளின்படி ஒரு வங்கி தனது வாடிக்கையாளரின் கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யவில்லை என்றால் அந்த வங்கிகள் கடுமையான தண்டம் கட்டவேண்டி வரும்.
பயப்படாதீர்கள் கேஒய்சி யை அப்டேட் செய்வதொன்றும் அவ்வுளவு கடினமான காரியம் ஒன்றும் இல்லை.
ஆஇபிஐ தனது கேஒய்சி வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. அதன்படி தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் (National Population Register) கடிதங்கள் செல்லுபடியாகும் ஆவணம்.
உங்கள் கணக்கு தொடர்பான கேஒய்சி ஐ அப்டேட் செய்யசொல்லி உங்களுக்கு தகவல் வந்திருந்தால் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு முகவரி (address) மற்றும் இனம் காணும் (identity proof) ஆவணத்தின் நகலை கொடுத்து கேஒய்சி ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
தனிநபர்களுக்கான கேஒய்சி
கடவுச்சீட்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
ஆதார் அட்டை
பான் அட்டை
தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் (National Population Register) கடிதங்கள்
தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் அடையாள அட்டை
சமீபத்திய புகைபடம்
கைபேசி எண்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.