Advertisment

வாடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!

ஆன்லைனிலே செய்துகொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi savings account minimum balance

sbi savings account minimum balance

sbi online net banking : பொதுவாக வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் எதற்கு எடுத்தாலும் வங்கியை அணுக வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால், ஏடிஎம் மெஷின்கள் வந்தவுடன் அந்த நிலை சற்று குறைந்தது. இந்நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதைவிட சுலபமாக பணபரிமாற்றம் ஆன்லைனிலே செய்துகொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே எப்படி நெட் பேங்கிங் வசதி பெறுவது?

இதற்கு முதலில் என்னவெல்லாம் தேவை?

சேமிப்புக்கணக்கு ஏடிஎம் கார்டு

வங்கிக்கணக்கு எண்

வங்கியின் ஐ.எப்.எஸ்.சி நம்பர்

சி.ஐ.எப் நம்பர்

வங்கிக்கணக்குடன் இணைத்துள்ள உங்களது மொபைல் நம்பர்

எப்படி பெறுவது?

உங்களுக்கு வங்கிக்கணக்கு உள்ள கிளையில் இருந்து முன்னதாகவே உங்களுக்கு Pre-printed Kit (PPK) கொடுத்திருந்தால் நீங்கள் எளிமையாக நெட் பேங்கிங் வசதியை பெற முடியும். அந்த கிட்-இல் உங்களுக்கு ஐ.டி, பாஸ்வேர்டு கொடுத்திருப்பார்கள்.

அப்படி இல்லையென்றால் கீழ்குறிப்பிட்ட படி செய்யவும்.

சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது தெரியும்.. ஆனா அந்த பிஎஃப்-க்கு எவ்வளவு வட்டி தெரியுமா?

www.onlinesbi.com என்ற எஸ்.பி.ஐ இணையதளததில் செல்லவும். அதில், Personal Banking section என்பதை அழுத்தி அதற்கு கீழ், New User Registration /Activation link என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்களது வங்கிக்கணக்கு எண், சி.ஐ.எப், நம்பர், ஐ.எப்.எஸ்.சி நம்பர் (நம்பர் இல்லையென்றால் உங்களது வங்கியின் பெயர் மற்றும் இடத்தை குறிப்பிட்டு ஆன்லைனில் எடுத்துக்கொள்ளலாம்) , பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ஆகியவற்றை இடவும்.

மேலும், இன்டர்நெட் பேங்கிங் வசதி உங்களுக்கு முழுமையாக அல்லது குறைந்தப்பட்ட பணப்பரிமாற்றம் வேண்டுமா என்பதை கிளிக் செய்யவும்.

இறுதியில் submit யை கிளிக் செய்யவும். இப்போது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த நம்பரை இடவும்.

அதைத்தொடர்ந்து உங்களது நெட் பேங்கிங் விண்ணப்பத்தை ஆக்டிவேட் செய்யவேண்டும் என்றால் ஏடிஎம் கார்டு உபயோகித்து செய்ய முடியும்.

ATM Card என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதில் சென்று உங்களது ஏடிஎம் கார்டு தகவல்களை அளிக்க வேண்டும். (ஏடிஎம் கார்டு இல்லையென்றால் வங்கியில் இருந்து உங்களது நெட் பேங்கிங் கணக்கை ஆக்டிவேட் செய்வார்கள்.

அதன்பின்னர் திறக்கும் விண்டோவில் உங்களது நெட் பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். இப்போதும் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.

அந்த ஐடி மற்றும் பாஸ்வேர்டை உபயோகித்து நீங்கள் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment