Advertisment

உங்கள் கனவுக்கு ஏற்ப வாய்ப்பு: எஸ்பிஐ-யின் இந்த சேமிப்பு வசதி தெரியுமா?

State Bank Of India Netbanking: பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ஆர்டி கணக்கை ஆன்லைன் மூலமாகவே தொடங்க அனுமதிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi online, online sbi, sbi rd, sbi website, SBI, State Bank of India, Personal Finance, recurring deposit, RD, RD opening, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

sbi online, online sbi, sbi rd, sbi website, SBI, State Bank of India, Personal Finance, recurring deposit, RD, RD opening, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

Online SBI: நாம் ஒரு உடல்நலம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருந்தாலும், தங்களது பணத்தை பாதுகாப்பான அமைப்புகளில் முதலீடு செய்து போதுமான வருவாயை ஈட்ட வேண்டும் என்று எப்போதும் விரும்புவோர் இருப்பார்கள். நீங்கள் ஒரு தொடர் வைப்பை - ஆர்டி (recurring deposit) தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை நீங்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ஆர்டி கணக்கை ஆன்லைன் மூலமாகவே தொடங்க அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இதை எளிதாக செய்யலாம். அதற்கு முன்பு, ஆர்டி கணக்கின் சில அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தொடர் வைப்பு (Recurring deposit) என்றால் என்ன?

தொடர் வைப்பு என்பது இந்திய வங்கிகளால் வழங்கப்படுகின்ற ஒரு தனித்துவமான term-deposit. இது ஒரு முதலீட்டு கருவி மக்கள் இதில் முறையாக டெப்பாஸிட் செய்து முதலீட்டின் மீது ஏற்புடைய வருமானத்தை ஈட்ட அனுமதிக்கிறது. தொடர் வைப்பின் வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடும்.

மாத தவனைக்கான குறைந்தபட்ச தொகை ரூபாய் 100/-. கணக்கை தொடங்கிய பிறகு தவனைக்கான தொகை மற்றும் தவனைகளின் எண்ணிக்கைகள் ஆகியவற்றை மாற்ற முடியாது. டெபிட் அட்டையில் உள்ளது போலவே பெயர், செயல்படும் விதம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்டி கணக்கின் வங்கி கிளை ஆகியவை இருக்கும். ஆர்டி கணக்கு TDS க்கு உட்பட்டது.

எஸ்பிஐ யில் இ-ஆர்டி (e-RD) கணக்கை எவ்வாறு தொடங்குவது

- onlinesbi.com என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்கள் சான்றுகளை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

- ‘Fixed Deposit’ என்பதை சொடுக்கி ‘e-RD (RD)/ e-SBI Flexi Deposit account' விருப்ப தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

- e-RD (Recurring Deposit) தேர்வை தேர்ந்தெடுத்து ‘Proceed’ என்பதை சொடுக்கவும்.

- எந்த கணக்கிலிருந்து நீங்கள் தொகையை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த கணக்கை தேர்ந்தெடுத்து தொகையை செலுத்தவும்.

- டெப்பாசிட்டின் tenure ஐ நீங்கள் அடுத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

- உங்கள் ஆர்டி கணக்குக்கான முதிர்வு அறிவுறுத்தல்களை (maturity instruction) தேர்ந்தெடுக்கவும்.

- ஒரு nominee ஐ சேர்க்கவும்.

- தொடர் வைப்பு தொகையின் விவரங்கள் ஒரு புதிய பக்கத்தில் தெரியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment