SBI NetBanking, SBI UPI App, Online SBI, State Bank Of India, எஸ்பிஐ, எஸ்பிஐ ஆன்லைன், எஸ்பிஐ நெட் பேங்கிங்
SBI Online Banking: நெட் பேங்கிங் நடைமுறையில் பணத்தை பரிமாற்றம் செய்யும் போது உங்கள் கணக்கில் பயனாளிகளை சேர்ப்பதில் சோர்வடைகிறீர்களா? அதற்கு ஒரு விரைவான தீர்வை தேடுகிறீர்களா? அப்படியானால் பாரத ஸ்டேட் வங்கியின் UPI ஆப் ஆன BHIM SBI Pay ஐ நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
Advertisment
இந்த payment solution, UPI-இல் பங்கேற்கும் அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்கள் ஸ்மார்ட் கைபேசியை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் (send money), பணத்தை பெறவும் (receive money), ஆன்லைன் மூலமாக பணம் அடைப்பதற்கும் (online bill payments), ரீசார்ஜ் செய்வதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் (shopping) அனுமதிக்கிறது.
BHIM SBI Pay பயன்படுத்துபவர்கள், நிதியை பரிமாற்றம் செய்வதற்கும் முன்பு பயனாளர்களை பதிவு செய்ய தேவையில்லை. பயன்படுத்துபவர்களுக்கு Virtual Paymat Address (VPA)/ Account+IFSC Code/ ஆதார் எண்/ பயனாளியின் QR code ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தேவை. இந்த விவரங்களை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க முடியும். இதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் பயனாளி விவரங்களை உள்ளீடு செய்ய தேவையில்லை.
Advertisment
Advertisements
பயனாளியும் நிதியை பெற UPI யில் பதிவு செய்ய வேண்டுமா?
VPA மற்றும் QR Code பயன்முறையில் பயனாளி UPI உடன் பதிவு செய்ய வேண்டும், இதையொட்டி அவருக்கும் ஒரு Virtual ID (VAP) அல்லது QR code இருக்கும். அனால் Account+IFSC ல் பயனாளி UPI க்கு பதிவு செய்ய தேவையில்லை.
பயனாளியின் வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்படும். எனவே அவருக்கு ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
எனது நண்பர்கள் மற்றும் தொடர்புகளுக்கு (contact) BHIM SBI Pay ல் பதிவு செய்து பயன்படுத்த எவ்வாறு பரிந்துரை செய்வது?
குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப், மின்னஞ்சல், முகநூல், Share to phone போன்ற பல வழிகளில் BHIM SBI Pay ஆப் குறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகளுக்கு பரிந்துரை செய்யலாம்.
அழைப்பை அனுப்புவதற்கு BHIM SBI Pay ஆப்பில் லாகின் செய்து main menu வுக்கு சென்று ‘Invite’ என்பதை தேர்வு செய்யவும்.
நண்பர்கள் மற்றும் தொடர்புகளுக்கு SBI Pay Appல் பதிவு செய்வதற்கு அழைப்பு விடுக்க, கொடுக்கப்பட்டுள்ள பல விருப்ப தேர்வுகளிலிருந்து ஒன்றை தேர்வு செய்யவும்.
அழைப்பை பெறும் பயனர் இணைப்பிலிருந்து BHIM SBI Pay ஆப்பை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"