state bank of india online : பொதுத்துறை வங்கியில் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்தது.
இந்த மாற்றத்தின் வசதி மற்றும் சேவைகள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அதே போல் தெரியாதவர்களுக்கு பகிர்வது அதை விட அவசியம்.
SBI Jobs: எஸ்பிஐ-ல அக்கவுண்ட்டும் இருக்கு, வேலையும் இருக்கு - எஸ்பிஐ வங்கியின் மெகா அறிவிப்பு
1. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள 70 வயதுக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அதற்காக வங்கிச் பரிவத்தனைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கிச் சாரா பரிவர்த்தனைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
2. sbi yono:
யோனோ கேஷ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் – களில் கார்டு இல்லாமலே பணப்பவர்த்தனை செய்யலாம்.இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை செய்யும் முதல் வங்கி என்ற பெயரை பெறுகிறது எஸ்பிஐ. இந்த வசதி இந்தியா முழுவதும் 16,500 ஏடிஎம்-களில் பயன்பாட்டிற்கு வருகிறது.
3. ரெப்போ வட்டி :
ரூ. 1 கோடி வரையிலான இருப்புக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வட்டி வீதத்தை ரெப்போ வீதத்துடன் தொடர்புபடுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டிவீதம் நிலையான சதவீதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது. (தற்போது இது 3.5 சதவீதமாக உள்ளது) ரெப்போ வட்டி வீதம் 25 அடிப்படை புள்ளிகள் கடந்த பிப்ரவரியில் குறைக்கப்பட்டது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த ரூல்ஸ்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்
வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி வீதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. எனில், ரெப்போ வட்டி வீதம் குறையும் போது, சேமிப்புக் கணக்கு வட்டி வீதமும் குறையும். இது சேமிப்புக் கணக்கில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.