உஷாரா இருங்க மக்களே… உங்க சேமிப்புப் பணத்தை குறி வைக்கும் கும்பல்: ஸ்டேட் வங்கி 6 டிப்ஸ்

SBI NetBanking Alerts: மோசடிகாரர்கள் அனுப்பும் செய்திகள் எஸ்பிஐ (State Bank Of India) இணைய வங்கி (Net Banking) பக்கத்தைப் போலவே இருக்கும்.

By: April 30, 2020, 8:10:26 AM

SBI Online Tamil News: ஆன்லைன் வங்கி சேவையைப் பயன்படுத்தும் போது இந்த ஆறு குறிப்புகளை பின்பற்றுமாறு கணக்கு வைத்திருப்பவர்களிடன் எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. புதிய வழி cybercrime ல் மோசடிகாரர்கள் அனுப்பும் செய்திகள் எஸ்பிஐ இணைய வங்கி (Net Banking) பக்கத்தைப் போலவே எப்படி இருக்கும் என்பதை பற்றி முன்பு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய 6 முக்கியமான குறிப்புகளை உங்கள் பாதுகாப்பிற்கான ஒரு கடிதம் (‘A letter for your safety’) என்ற தலைப்பில் எஸ்பிஐ இந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.

SBI NetBanking Alerts: பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் மோசடி எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஈஎம்ஐ தொடர்பாக அல்லது DBT அல்லது பிரதம மந்திரியின் பராமரிப்பு நிதி (Prime Minister Care fund) அல்லது வேறு எதாவது பராமரிப்பு நிதி என கேட்கும் எந்த இணைப்பையும் சொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாதம் எஸ்பிஐ, பயனர்களை ஈஎம்ஐ மோசடி தொடர்பாக எச்சரிக்கை செய்தது.

2) குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது விளம்பரங்கள் மூலம் பணப் பரிசுகள் தருவதாகவோ அல்லது வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவோ கூறும் போலி திட்டங்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்

3) வங்கி தொடர்பான அனைத்து கடவுச்சொற்களையும் அவ்வப்போது மாற்றவும்.

4) எஸ்பிஐ அல்லது அதன் அலுவலர்கள் எப்போதும் வாடிக்கையாளர்களை தொலைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ தொடர்பு கொண்டு அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களான கடவுச்சொல் அல்லது OTP ஆகியவற்றை கேட்பதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

5) தொடர்பு எண் மற்றும் இதர தகவல்களுக்கு எப்போதும் எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தவும். இணைய தேடல் முடிவுகளில் கிடைக்கும் எந்த வங்கி தொடர்பான தகவல்களையும் நம்ப வேண்டாம்.

6) மோசடி காரர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு உடனடியாக புகார் அளிக்கவும்.

புதிய வழி cybercrime ல் மோசடிகாரர்கள் அனுப்பும் செய்திகள் எஸ்பிஐ இணைய வங்கி (Net Banking) பக்கத்தைப் போலவே எப்படி இருக்கும் என்பதை பற்றி முன்பு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi online tamil news state bank of india sbi netbanking alerts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X