Advertisment

SBI Passbook Online: எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் பாஸ்புக் வாங்க சிரமப்படவே வேண்டாம்! இதோ ஈஸி வழி.

வங்கி கணக்கை பாஸ் புத்தகத்தில் பார்ப்பது போலவே பார்க்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi personal banking

sbi personal banking

SBI Passbook Online : வங்கி சேவையில் பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கி வருகின்றன. அதிலும் பொதுத்துறை வங்கியை பொருத்தவரையில் எஸ்.பி.ஐ வங்கி சேவை சிறப்பான வாடிக்கையாளர்கள் சேவையை வழங்கி வருகின்றன.

Advertisment

வீட்டில் இருந்தப்படியே பெர்சனல் லோன் வசதி தொடங்கி வாடிக்கையாளர்களை வெகு நேரம் அலைக்கழிக்காமல் முடிந்த வரை ஆல்னைனிலே அவர்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிற்து.

அந்த வகையில் இன்றைய தினம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான வசதி எம் பாஸ்புக். இந்த பாஸ்புக் வசதியை நீங்கள் ஆன்லைனிலே மெயிண்டேன் செய்யலாம். ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கை பாஸ் புத்தகத்தில் பார்ப்பது போலவே பார்க்க முடியும்.

சரி.. எம் பாஸ்புக் வசதியை எப்படி பெறலாம்? இதோ அதுக் குறித்து முழு தகவல்கள்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முதலில் SBI Anywhere செயலியை டவுன்லோட் செய்துக் கொள்ள வேண்டும். அதில் முதலில் லாங்கின் செய்யும் போது உங்கள் அக்கவுண்ட் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. கட்டணம் விவரம் இங்கே!

உள்ளே சென்றதும் user name மற்றும் பாஸ்வேர்ட் தகவல்களை புதியதாக பதிவு செய்து, பின்பு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இனிமேல் அதே user name மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் அந்த செயலியை பயன்படுத்த முடியும்.

பாஸ்புக்கை சரிபார்த்தல்.

1. செயலியில் இருக்கும் ‘My accounts’ வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

2. பின்பு அதில் வரும்‘M-passbook’ வசதியை தொடரவும்.

3. ‘Generate/reset’ பட்டனை கிளிக் செய்யவும்.

4. இப்போது உங்களுடைய user name - யை கொடுத்து 4 இல்ல pin நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் உங்களுடையை எம் பாஸ்புக் வசதி தொடங்கி விட்டது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment