எஸ்பிஐ வங்கியில், SBI லைஃப் பென்ஷன் திட்டம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இத்திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகள் செலுத்தும் பிரிமியம் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பென்ஷனை வழங்கும் .
நீங்கள் இல்லாதுவிடத்து உங்கள் வாழ்க்கை துணைக்கு உதவிக்கரமாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக பிரிமியம் செலுத்தும் போது முழுத்தொகையும் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும்.
5ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதாந்தம் செலுத்தும் 25000 ரூபாய், 5 ஆண்டுகள் முடிவில் 15,00,000 ரூபாய் பிரீமியமாக இருக்கும். அடுத்துவரும் 10ஆவது ஆண்டில் அந்த தொகை 32,44,000 ஆயிரம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.
10ஆவது ஆண்டு முதல் நீங்கள் மாதம் 25000 பென்ஷன் பெற முடியும் அதாவது 40 வயதுஎன்று வைத்துக் கொண்டால் 50 வயதில் இருந்து வாழ்நாள் முழுக்க ரூபாய் 25,000 மாதம் பென்ஷன், வருடத்திற்கு 3,00,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இந்த பென்ஷன், உங்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை துணைக்கும் வழங்கப்படும். அரசு
பென்சன் திட்டத்தில் இது பாதியாக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உங்கள் இருவரின் வாழ்க்கைக்குப் பின், எஸ்பிஐ லைப் இன் திட்டத்தில் உங்கள் வாரிசுகளுக்கு அந்த முழுமையான 32,44,000 ரூபாயும் வழங்கப்படும்.
எனவே இது உங்களுடைய மூன்று தலைமுறையைக் காக்கும் ஒரு சிறந்த திட்டம் ஆகும்.