sbi personal banking : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. எஸ்பிஐ-யின் வாடிக்கையாளர் சேவை அனைவரையும் கவர்ந்த ஒன்று. அதே போல் வாடிக்கையாளர்கள் வசதிக்காவும் எஸ்பிஐ பல்வேறு சிறப்புதிட்டங்களையும் நடைமுறையில் வைத்துள்ளது.
சமீபத்தில் எஸ்பிஐ அறிவித்த வீட்டு கடன் திட்டம் தொடக்கி, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதுவும் பண்டிகை காலத்தில் எஸ்பிஐயின் இந்த புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தான்.
எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு என்னவென்றால் செயலாக்கக் கட்டணம் (processing fee). அதாவது எஸ்பிஐ வங்கி தனது வீட்டுக்கடன் திட்டங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைக் குறைத்ததால் வங்கிகள் கடன் திட்டங்கள் மீது பெறும் வட்டியின் லாபம் குறைந்துள்ளது. அதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த செயலாக்க கட்டணம் ரத்து என்ற அறிவிப்பு திரும்ப பெறுவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sbi personal banking: செயலாக்கக் கட்டண விவரம்
0.4 சதவீதம். கடன் தொகைக்கு ஏற்ப 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கட்டணம். கட்டுமான நிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.