/indian-express-tamil/media/media_files/2025/05/16/wkCui0Ju5qUAxOWYFrI1.jpg)
எஸ்.பி.ஐ, தனிநபர் கடனாக ரூ. 35 லட்சம் வரை வழங்குகிறது. இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.30% முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க சுலபமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகள், நெகிழ்வுத்தன்மையான திருப்பிச் செலுத்தும் கால அளவு மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த ஆவணங்கள் போன்ற பல வசதிகளை பல்வேறு வழிகளில் எஸ்.பி.ஐ வழங்குகிறது.
ரூ. 35 லட்சத்துக்கு மேற்பட்ட தனிநபர் கடன்களுக்கும் சிறப்பு தேர்வுகள் உள்ளன. இது கடன் வாங்கும் செயல்முறையையும் அதிக சிக்கல் இல்லாமல் இருக்கிறது. தற்போது, ரூ. 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற விரும்பும் நபர்களுக்கு எஸ்.பி.ஐ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எனப் பல வழிகளை வழங்குகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
யோனோ ஆப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: யோனோ எஸ்.பி.ஐ செயலியில், 'கடன்கள்' பகுதிக்குச் செல்லவும். பின்னர் 'தனிநபர் கடன்' என்பதைத் தேர்ந்தெடுத்து, தகுதி அளவுகோல்களைச் சரிபார்க்கவும். கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் கால அளவைத் தேர்வு செய்ய வேண்டும். ஓ.டி.பி சரிபார்ப்பு மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். அதில், கேட்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒப்புதல் கிடைத்தவுடன், நீங்கள் அளித்த வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்தப்படும்.
முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன்கள்: தகுதியுள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் யோனோ செயலி அல்லது இணைய வங்கி மூலம் முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பித்து பெறலாம். இதற்கு, முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் பகுதியைத் தேர்ந்தெடுத்து, சரிபார்ப்புக்காக பான் விவரங்கள் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, விரும்பிய கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் கால அளவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆஃப்லைன் விண்ணப்பம்: உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எஸ்.பி.ஐ கிளைக்குச் சென்று, வங்கி பிரதிநிதியுடன் கடன் தகுதி மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடலாம். இதன் மூலம் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களைப் புரிந்துகொள்ளலாம். தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
தகுதி அளவுகோல்கள்:
அடிப்படை தகுதித் தேவையாக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 15,000 வருமானம் மற்றும் குறைந்தது ஒரு வருட தொடர்ச்சியான பணி அல்லது வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.பி.ஐ ஊதிய கணக்கு வைத்திருப்பவர்கள் எளிய மற்றும் குறைவான ஆவண நடைமுறைகள் மூலம் இந்த விஷயத்தில் பயனடையலாம். தனிநபரின் தகுதி அளவுகோல்கள் குறித்த முழு விவரங்களுக்கு எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.
வட்டி விகிதம் | ஆண்டுக்கு 10.30% – 15.30% (சராசரி: 12.68%) |
கடன் தொகை மற்றும் காலம் | ரூ. 35 லட்சம் வரை, 7 ஆண்டுகள் வரை காலம் |
கட்டணங்கள் மற்றும் தள்ளுபடிகள் | செயலாக்கக் கட்டணம் 1.5% + ஜிஎஸ்டி வரை (தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தள்ளுபடி) |
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்ட வட்டி விகிதங்கள் விளக்கம் அளிக்க மட்டுமே உள்ளன. பொருந்தக்கூடிய தனிப்பட்ட வட்டி விகிதங்களுக்கு எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.
தேவையான ஆவணங்கள்:
அடையாளச் சான்று: பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம்.
முகவரிச் சான்று: பயன்பாட்டு பில்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்.
வருமானச் சான்று: சமீபத்திய ஊதியம் தொடர்பான படிவம் அல்லது வங்கி அறிக்கைகள்.
மேலும், துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சரி பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.