SBI Personal Loans : இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் பெண்களுக்கு ஈஸியாக லோன் வழங்கும் வங்கிகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் கல்யாணி திட்டத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிலாக இருந்தாலும், ஏற்கனவே செய்து வரும் தொழிலாக இருந்தாலும் 100 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. மேலும் கடனின் அளவைப் பொருத்து 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கியில் 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறும்போது 0.50 சதவீத வட்டி சலுகையும், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு எந்த ஒரு பிணையும் இல்லாமலும் கடன் அளிக்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மகிளா உதயம் நிதி திட்டம் கீழ் பெண்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது 10 வருட தவணையில் கடன் வழங்கப்படுகிறது.
தேனா வங்கியில் 20 லட்சம் ரூபாயும், கல்வி மற்றும் கட்டுமானம் என்றால் 20 லட்சம் ரூபாயும், சிறு தொழில் என்றால் 50,000 ரூபாயும் தொழில் தொடங்க உள்ள பெண் தொழில்முனைவோருக்குத் தேனா வங்கிக் கடனாக வழங்கும். விவசாயம் உள்ளிட்ட சில துறை சார்ந்த வணிகங்களுக்கு 0.25 சதவீதம் தள்ளுபடியும் தேனா வங்கி வழங்குகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி! அதுவும் மிக மிக குறைந்த வட்டியில்.
சிண்டிகேட் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்ம ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. பார்ட்னர்ஷிப் வணிகம் என்றால் 51 சதவீத பங்குகள் பெண் விண்ணப்பதாரர் வசம் இருக்க வேண்டும். 2 சதவீதம் வரை வட்டியில் சலுகைகளும் அளிக்கப்படுகிறது.