SBI phone banking : பொதுத்துறை வங்கிகளில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள எஸ்பிஐ வங்கி,வீட்டில் இருந்தப்படியே நீங்கள் அனைத்து விதமான வசதிகளையும் பெற எஸ்பிஐ போன் பேக்கிங் என்ற சிறப்பான வசதியை நடைமுறையில் வைத்துள்ளது.
இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. இதுவரை இதுக் குறித்து தெரிந்துக் கொள்ளாதவர்கள் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை மற்றவர்களுக்கும் பகிரவும்.
உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும், வங்கி தொடர்பான அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிக்குச் செல்லாமலேயே செய்யலாம். பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உங்களது மொபைல் எண் மூலம் இந்த சேவையை தொடங்கலாம்.
1800-22-11 அல்லது 1800-425-3800 அல்லது 080-2659990 இந்த எண்களுக்கு கால் செய்து முதலில் எஸ்பிஐ போன் பேக்கிங் வசதியை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த வசதி உங்களுக்கு ஈஸியோ ஈஸி தான்.
எஸ்பிஐ போன் பேக்கிங் சேவையில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
1. வீட்டுக்கடன், கார் லோன் சேவை:
அவசரமாக உங்களுக்கு வீட்டுக் கடன் அல்லது கார் லோன் குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? உடனே ‘HOME’ என்று டைப் செய்து 09223588888 எஸ். எம். எஸ் அனுப்ப வேண்டும். பின்பு வங்கி நிர்வாகிகளே உங்களை அணுகுவார்கள்.
2. கடந்த 6 மாதம் வரையில் உங்களுடைய சேமிப்பு கணக்கின் e-statement விவரங்கள் வேண்டுமா? வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை ESTMT என டைப் செய்து 09223588888 இந்த எண்ணிற்கு எம்.எம்.எஸ் அனுப்பினால் போதும். பிடிஎப் பைலாக உங்கள் மொபைலுக்கு e-statement வந்து விடும்.
எஸ்பிஐ வங்கியில் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்.. எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்?
3. செக் புக் சேவை :
உங்களின் எஸ்பிஐ செக் புக் தொலைந்து விட்டதா? அல்லது தீர்ந்து போய் விட்டதா? வங்கிக்கு அலைய வேண்டும் என்ற அவசியமே இல்லை.cheque book என டைப் செய்து 09223588888 எஸ். எம். எஸ் அனுப்பினால் 2 மணி நேரத்தில் உங்கள் கையில் செக் புக் இருக்கும்.
இப்படி வாடிக்கயாளர்களின் சேவைக்காவே எஸ்பிஐ வங்கி போன் பேக்கிங் சேவையில் ஏகப்பட்ட வசதிகளை வைத்துள்ளது. வரும் நாட்களில் மற்ற வசதிகளை தெரிந்துக் கொள்ளலாம் காத்திருங்கள்.