இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு பின் எண்ணை மாற்ற எளிய வசதியைக் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் மொபைல் மூலம் இதனைச் செய்யலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உங்கள் டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின்னை ஐவிஆர் தொடர்பு மையத்தின் மூலம் உருவாக்க தொந்தரவில்லாத செயல்முறையை கொண்டு வந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் இருந்து 1800-1234 என்ற கட்டணமில்லா SBI வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு டயல் செய்யலாம். எஸ்பிஐயின் கட்டணமில்லா IVR சிஸ்டம் மூலம் உங்கள் டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின்னை உருவாக்குவதற்கான எளிய வழிமுறைகள் இதோ
எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை
உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 1800-1234 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும்.
ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு தொடர்பான சேவைகளுக்கு 2ஐ அழுத்தவும்.
பின் உருவாக்க 1ஐ அழுத்தவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து நீங்கள் அழைக்கிறீர்கள் எனில் 1ஐ அழுத்தவும் அல்லது வாடிக்கையாளர் சேவை மைய முகவருடன் பேச 2ஐ அழுத்தவும்.
நீங்கள் கிரீன் பின்னை உருவாக்க விரும்பி 1 ஐ அழுத்தியிருந்தால், ATM கார்டின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிட வேண்டும்.
கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த 1 ஐ அழுத்தவும்.
ஏடிஎம்மின் கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட 2ஐ அழுத்தவும்
உங்கள் கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிடவும்.
கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த 1 ஐ அழுத்தவும்.
கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட 2ஐ அழுத்தவும்.
உங்கள் பிறந்த ஆண்டை உள்ளிடவும். அவ்வளவு தான் உங்கள் கிரீன் பின்னை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கிரீன் PIN அனுப்பப்படும்.
இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட பின்னை மாற்ற வேண்டும்.
இதற்கு, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் எஸ்பிஐ ஏடிஎம்களை அணுகி பின்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil