நாம் தினமும் ஒரு ஆன்லைன் மோசடி செய்திகளையாவது கேட்டிருப்போம். அதுவும் வங்கியிலிருந்து போன் செய்வதாக கூறி, லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளதாக தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஆன்லைன் வங்கி மோசடி அதிகரித்து வரும் சம்பவங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எஸ்பிஐயின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக, எஸ்பிஐ ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டது, அதில் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆப்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். மேலும், வங்கியின் உண்மையான ஆப்களை மட்டுமே உங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நிதி மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்கள் சரிபார்க்கப்பட்ட மூலங்கள் அல்லது டெவலப்பர்களிடமிருந்து வரும் பயன்பாடுகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. அறியப்படாத மூலத்திலிருந்து ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது வாடிக்கையாளரின் தனிப்பட்ட மற்றும் நிதி தரவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மற்றொரு ட்வீட்டில், எஸ்பிஐ கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வழக்கமான பணம் பரிமாற்றம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியதுடன், நேரடி பணப்பரிமாற்றத்திற்கு மாற்றாக NFC- இயக்கப்பட்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு மாறும்படி கேட்டுக்கொண்டது.
இதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கான ஆலோசனையை ட்வீட் செய்து, வங்கியின் வாடிக்கையாளர் பராமரிப்பு ஹெல்ப்லைனில் இருப்பதாகக் கூறும் எந்த எண்ணையும் அல்லது இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. மேலும், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சேனல்களை அணுகவும், வங்கி குறித்த எந்த தகவலையும் பெற https: /www.pnbindia.in ஐப் பயன்படுத்தவும் அது கேட்டுக்கொண்டது.
கொரோனா ஊரடங்கின்போது, UPI- அடிப்படையிலான பயன்பாட்டு மோசடி அதிக அளவில் நடந்துள்ளதாக வங்கிகள் மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களால் தெரிவித்துள்ளது. கேஷ்பேக் சலுகைகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மோசடி அழைப்புகளைப் பற்றி மக்கள் புகார் அளித்து வந்தனர். இதனையடுத்து, இத்தகைய மோசடிகளிலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, வங்கிகள் பெரும்பாலும் உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
இருப்பினும், இதுபோன்ற ஏதேனும் மோசடி உங்களிடம் நடந்தால், உடனடியாக தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டல் அல்லது உள்ளூர் போலீசில் புகார் பதிவு செய்யப்பட வேண்டும். கூடுதலாக, வங்கிக்குச் சென்று அவர்களுக்குத் தெரிவிக்கவும், இதன் மூலம் மிகச் சிறந்த தீர்வை விரைவில் அடைய முடியும்.
நாட்டில் சைபர் கிரைம் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்டல் அமைக்கப்பட்டது. நிதி அல்லது வேறு எந்த இணைய குற்றம் குறித்தும் யார் வேண்டுமானலும் https://cybercrime.gov.in/ இல் உள்நுழைந்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.