சுலபமான சேமிப்பு திட்டம்! SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி?

Banking news in tamil, SBI PPF Account opening guidelines in tamil: பொது வருங்கால வைப்பு நிதி உறுதியான வருமானத்தை வழங்குகிற திட்டமாகும். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியாகும். இது மிகவும் கவர்ச்சிகரமான சிறிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் ஒரு பி.பி.எஃப் கணக்கை திறக்கத் திட்டமிட்டிருந்தால் அதன் நன்மைகள் மற்றும் அதனை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிமுறைகள் இதோ.

பொது வருங்கால வைப்பு நிதி உறுதியான வருமானத்தை வழங்குகிற திட்டமாகும். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியாகும். இது மிகவும் கவர்ச்சிகரமான சிறிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் ஒரு பி.பி.எஃப் கணக்கை திறக்கத் திட்டமிட்டிருந்தால் அதன் நன்மைகள் மற்றும் அதனை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிமுறைகள் இதோ.

இது ஒரு அரசாங்கத் திட்டம்  எனவே, இதனை இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். நீங்கள் இக்கணக்கை அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகளில் தொடங்கிக்கொள்ளலாம்.

பி.பி.எஃப் கணக்கை திறக்க சிறந்தது எஸ்பிஐன்  பி.பி.எஃப் திட்டமாகும். இந்தக் கணக்கை எஸ்பிஐ வங்கி கிளையிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ துவக்க முடியும். ஆன்லைன் மூலமாக பி.பி.எஃப் கணக்கை எவ்வாறு துவங்குவது என்பதை இப்போது பார்போம்.

 உங்கள் ஆதார் எண் மற்றும் தொலைப்பேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கில் இணைக்க வேண்டும். எஸ்பிஐ இணைய பக்கத்தில் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உங்கள் வங்கி கணக்கை திறக்கவும்.

இதில் ‘Request and Enquiries’ ஐ கிளிக் செய்தால் கீழே தோன்றும் மெனுவில் புதிய பி.பிஎஃப் கணக்குகள் (New PPF Accounts) ஐ தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது நீங்கள் PPF பக்கத்திற்கு செல்வீர்கள்.

அந்த பக்கத்தில் உங்களது நிரந்தர கணக்கு எண் (PAN Number) மற்றும் உங்கள் பெயர் உள்ளிட்ட உங்களது தகவல்கள் இருக்கும். அதனை சரிபார்த்த பின் தொடரவும்.

இப்பொழுது தோன்றும் டயாலாக் பாக்ஸ்ல் சமர்ப்பி (Submit) என்பதை அழுத்தினால் நீங்கள் வெற்றிகரமாக கணக்கை துவங்கியதற்கான குறிப்பு எண் (Reference Number) வரும்.

இதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து உங்களது KYC நடைமுறைகளை 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணக்கை குறைந்தபட்சம் ரூபாய் 500 மூலம் திறக்க முடியும். அதிகபட்ச ஆண்டு வரம்பு ரூபாய் 1.5 இலட்சம். இதன் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதன் வட்டி விகிதத்தை இந்திய அரசே தீர்மானிக்கும். தற்போது இதன் வட்டி வீதம் 7.10 சதவீதமாகும். இதற்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi ppf account online opening guidelines

Next Story
கொஞ்ச நாளில் அதிக வட்டி வேணுமா? இந்த ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்களை பாருங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com