செம்ம சான்ஸ்.. எஸ்பிஐ வங்கி உங்களை வேலைக்கு அழைக்கிறது!

21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டிலேயே மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும் . அதில் காலியாக உள்ள 39 பணியிடங்களுக்குத் தேர்வுகளை அறிவித்துள்ளது.
சார்ட்டட் அக்கவுண்டட் (chartered accountants) முடித்துள்ள பட்டதாரிகள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தமுள்ள 39 காலியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 600 ரூபாய் எனவும் பட்டியலினத்தவருக்கு 100 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை எஸ்பிஐ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணத்தை நெட்பேங்கிங்கின் மூலம் அனுப்பி தேர்வுக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் டிசம்பர் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பான் விபரங்களுக்கு //ibpsonline.ibps.in/sbispcbnov18/ என்ற இணையதளத்தில் தொடர்புக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close