Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

உங்கள் சேமிப்பை பாதுகாக்க எஸ்.பி.ஐயின் ஆர்.டி ... அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

இந்த கணக்கில் வைக்கப்படும் நிதிக்கும் நீங்கள் வட்டி கட்ட வேண்டும். இருப்பினும் 15ஜி/எச் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்தால் வரி விலக்கு உண்டு.

Written by WebDesk

இந்த கணக்கில் வைக்கப்படும் நிதிக்கும் நீங்கள் வட்டி கட்ட வேண்டும். இருப்பினும் 15ஜி/எச் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்தால் வரி விலக்கு உண்டு.

author-image
WebDesk
30 Nov 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 30 Nov 2019 14:11 IST

Follow Us

New Update
sbi news, sbi.com, sbionline.com in, ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ., பாரத ஸ்டேட் வங்கி, State Bank of India

SBI Online News, SBI Online Tamil News, SBI Online Tamil Nadu News, State Bank Of India, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி

SBI Recurring Deposit Account Investment Limits interest rates :  உங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க முயற்சி செய்கின்றீர்களா? அப்போது எஸ்.பி.ஐ வழங்கும் எஃப்.டி மற்றும் ஆர்.டி கணக்குகள் குறித்து நீங்கள் கொஞ்சம் யோசனை செய்யலாம். அதில் பணம் சேமிக்கப்படும் போது உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.  ஸ்டேட் பேங்கின் ஆர்.டி. கணக்கு குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் ஒரு பார்வை.

Advertisment

SBI Recurring Deposit Account - 10 முக்கிய அம்சங்கள்

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்.டி. கணக்கில் மாதத்திற்கு ரூ. 100 முதல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். டெபாசிட் செய்ய உச்ச வரம்பு தேவையில்லை.

ஆர்.டி. கணக்கில் நீங்கள் 12 மாதங்கள் முதல் 12 வருடங்கள் வரை பணம் சேமித்துக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

வட்டி விகிதம் என்று பார்க்கும் போது எஸ்.பி.ஐ பணியாளர்கள் மற்றும் எஸ்.பி.ஐயில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும் வட்டி விகிதத்தில் இருந்து 1% கூடுதலாக வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதலாக வட்டி வழங்கப்படும்.

இந்த கணக்குகளுக்கு பாஸ்புக் வழங்கப்படும்.

இந்த கணக்கில் வைக்கப்படும் நிதிக்கும் நீங்கள் வட்டி கட்ட வேண்டும். இருப்பினும் 15ஜி/எச் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்தால் வரி விலக்கு உண்டு.

மாதாந்திர தவணையை முறையாக செலுத்தாமல் விட்டால் அதற்கு எஸ்.பி.ஐ அபராதம் வசூலிக்கும். ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு காலம் என்றால் ரூ.100க்கு, ரூ. 1.50 வரை அபராதம் விதிக்கும். ஐந்தாண்டுகளுக்கு மேல் என்றால் ரூ.100க்கு ரூ. 2 என்ற அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த கணக்கின் முதிர்வு தேதி அன்று அல்லது அதற்கு பின்பு செய்யப்படும் டெபாசிட்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்றால் அந்த கணக்கு மூடப்பட்டு, அதில் இருக்கும் பணம் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு விடும்.

ஆர்.டி. முதிர்ச்சி அடைவதற்கு முன்பே நீங்கள் உங்களின் பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதியை எஸ்.பி.ஐ உங்களுக்கு வழங்குகிறது.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!