நாட்டின் மிகப் பெரிய வணிக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடன்களின் வட்டி விகிதத்தை 6.95 சதவீதத்திலிருந்து 6.70 சதவீதமாகக் குறைத்துள்ளது.ஏற்கனவே இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளை விட குறைவாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் குறைத்துள்ளது.
சனிக்கிழமை எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ரூ .30 லட்சம் வரை இப்போது 6.70 சதவீதத்தில் தொடங்கும் என்றும் ரூ .30 லட்சத்திலிருந்து ரூ .75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 6.95 சதவீதத்திலும், ரூ .75 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு 7.05 சதவீதத்திலும் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குபவர்களில் பெண்களுக்கு 0.05 சதவீத வட்டி சலுகையும் அறிவித்துள்ளது. யோனோ ஆப் மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 5 பிபிஎஸ் வட்டி வீதக் குறைப்பு கிடைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் 2021 மே 1 முதல் அமலில் உள்ளன.
எஸ்பிஐ வீட்டுக் கடன் கால்குலேட்டரின் கூற்றுப்படி, ரூ. 10 லட்சத்துக்கு 10 வருட காலத்திற்கு பழைய எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.95 சதவீதத்தின் படி ஒருமாதத்திற்கான இஎம்ஐ ரூ .11585 ஆகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வட்டி விகிதமான 6.70 சதவீதத்தின்படி அதே 10 லட்சம் ரூபாய்க்கு அதே 10 வருட காலத்திற்கு ஒரு மாதத்திற்கான இஎம்ஐ ரூ.11,457 ஆக இருக்கும். இதன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு மாத இஎம்ஐ ரூ.128 குறைவாக இருக்கும். அதுவே பத்து ஆண்டுகளுக்கு கணக்கிடயில் (ரூ. 128x12x10) என ரூ. 15360 குறைவாக இருக்கும்.
மறுபுறம், வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு கூடுதலாக 0.05 சதவீதம் எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி வீத தள்ளுபடி கிடைக்கும், இது ஆரம்ப வீட்டுக் கடன் விகிதத்தை 6.65 சதவீதமாகக் கொண்டுவரும். எனவே, பத்து வருடங்களுக்கு ரூ .10 லட்சம் வீட்டுக் கடனுக்கு, ஒரு பெண் வாடிக்கையாளரின் இ.எம்.ஐ ரூ .11,431 ஆக இருக்கும்.
எஸ்பிஐ வீட்டுக் கடன் ஈஎம்ஐ கணக்கீடு
எஸ்பிஐ வீட்டுக் கடன் மாதாந்திர ஈஎம்ஐ கணக்கீட்டிற்கு பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
EMI =
/ <(1 + R) ^ N-1>.
இங்கே P என்பது மொத்த கடன் தொகை, R என்பது வட்டி விகிதம், N கடன் கால அளவு மாதங்களில்.
மேற்கண்ட புள்ளிவிவரத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்,
EMI = <10,00,000 x 0.55 / 100 x (1 + 0.55 / 100) ^ 120 / <(1 + 0.55 / 100) ^ 120 - 1) = ரூ 11,407 (தோராயமாக) ஒரு மாதத்திற்கான இஎம்ஐ ஆக இருக்கும்.
ஈ.எம்.ஐ ஆனது, கடன் தொகை மற்றும் வட்டி விகிதங்களுக்கு நேரடியாக விகிதாசாரமாகவும், மேலும் கடன் காலத்திற்கு நேர்மாறான விகிதாசாரமாகவும் இருக்கும். ஈ.எம்.ஐ, கடன் தொகை அல்லது வட்டி விகிதத்திற்கு நேர்மாறான விகிதத்தில் அதிகரிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.