SBI Revises Fixed Deposit (FD) Interest Rates : நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது சேமிப்பு மற்றும் வைப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.
சில்லறை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிஐ நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் 15 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.15 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன (ரூ. 2 கோடிக்குக் குறைவான எஃப்.டி). மொத்த பிரிவில் (ரூ. 2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட எஃப்.டி கள்), எஸ்பிஐ நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் 30-75 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.30-0.75 சதவீத புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - SBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை
வங்கி இப்போது நிலையான வைப்புத் தொகையில், 2 கோடிக்கும் குறைவான '1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவான' காலம் கொண்ட திட்டத்தில், பொது மக்களுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்படுபவை. இந்நிலையில், எஸ்பிஐயின் திருத்தப்பட்ட நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 10, 2019 முதல் அமலுக்கு வந்தது.