Advertisment

SBI FD Rates: லேட்டஸ்ட் அப்டேட், லாபமா? நஷ்டமா?

State Bank Of India: சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை முதிர்ச்சியடையும் எப்டி’களில் 3.8 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை பெறுவார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi, state bank of india, sbi revised rates, sbi fd rates, ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, வணிக செய்திகள், வங்கிச் செய்திகள்

sbi, state bank of india, sbi revised rates, sbi fd rates, ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, வணிக செய்திகள், வங்கிச் செய்திகள்

SBI: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது நிரந்தர வைப்பு நிதிக்கான (fixed deposits- FDs) வட்டி விகிதங்களை 3 ஆண்டுகள் வரை 20 அடிப்படை புள்ளிகள் (basis points- bps) என்ற அளவில் குறைத்துள்ளது. எஸ்பிஐ’யின் புதிய நிரந்தர வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் மே 12 முதல் நடைமுறைக்கு வரும். வங்கி 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தனது கால வைப்புகளுக்கான விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது.

Advertisment

அமைப்பிலும், வங்கியில் போதுமான பணப்புழக்கத்தை கருத்தில் கொண்டு எஸ்பிஐ சில்லறை கால வைப்புக்கான வட்டி விகிதங்களை '3 ஆண்டுகள் வரை' 20 bps குறைத்துள்ளது, என ஒரு அறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட வட்டி விகிதங்கள் புதிய வைப்புத்தொகை மற்றும் முதிர்ச்சியடைந்த வைப்புகளின் புதுப்பிப்புகளுக்கு பொருந்தும்.

உங்கள் கனவுக்கு ஏற்ப வாய்ப்பு: எஸ்பிஐ-யின் இந்த சேமிப்பு வசதி தெரியுமா?

எஸ்பிஐ சமீபத்திய எப்டி வட்டி விகிதங்கள், மே 12 முதல்

7 நாட்கள் முதல் 45 நாட்கள் - 3.3%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் - 4.3%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் - 4.8%

211 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்கு குறைவானது - 4.8%

1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவானது - 5.5%

2 வருடம் முதல் 3 வருடங்களுக்கு குறைவானது - 5.5%

3 வருடம் முதல் 5 வருடங்களுக்கு குறைவானது - 5.7%

5 வருடம் முதல் 10 வருடங்கள் வரை - 5.7%

12 மே முதல் மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ யின் புதிய வட்டி விகிதங்கள்

எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 bps வட்டி விகிதத்தை அனைத்து tenor களுக்கும் வழங்குகிறது. சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை முதிர்ச்சியடையும் எப்டி’களில் 3.8 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை பெறுவார்கள்.

7 நாட்கல் முதல் 45 நாட்கள் - 3.8%

46 நாட்க்ள் முதல் 179 நாட்கள் - 4.8%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் - 5.3%

211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கு குறைந்த - 5.3%

1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைந்த - 6%

2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு குறைந்த - 6%

3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கு குறைந்த - 6.2%

5 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் வரை - 6.5%

IOB NetBanking: இன்னும் இதைச் செய்யவில்லையா? ‘அப்டேட்’ ஆகுங்க பாஸ்!

SBI Wecare Deposit

'SBI Wecare Deposit' என்ற பெயரில் எஸ்பிஐ சிறப்பு நிரந்தர வைப்பு திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக அதிக வட்டி விகிதத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தயாரிப்பின் கீழ் கூடுதலாக 30 bps பிரீமியம் மூத்த குடிமக்களின் சில்லறை கால வைப்புத்தொகைகளுக்கு "5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்" செலுத்தப்படும், என வங்கி தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment