sbi sate bank sbi state bank of india sbi : எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பென்சன்தாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும்.
Advertisment
பென்சன் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வாழ்வு சான்றிதழ் (ஜீவன் பிரமாண பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை டிசம்பர் மாத இறுதிக்குள் வங்கிக் கிளையிலேயே சமர்ப்பித்துவிடலாம்.
வாழ்வு சான்றிதழை நேரடியாக வங்கிக் கிளையிலும், ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம். இதுபோக, சிட்டிசன் சேவை மையங்களிலும், ஆதார் சேவை கேந்திராக்களிலும் சமர்ப்பிக்க முடியும்.
1. பென்சன் தொடர்பான தகவல்கள் SMS வாயிலாக
2. வங்கிக் கிளை அல்லது இமெயில் வாயிலாக பென்சன் ஸ்லிப்
3. இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
4. அனைத்து எஸ்பிஐ கிளைகளிலும் ஜீவன் பிரமாண சேவை.
5. சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”