sbi savings account depsoit interest : பொதுத்துறை வங்கிகளில் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கி சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி குறித்த விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
சமீப காலமாக எஸ்பிஐ அறிவிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைவு தொடங்கி, பர்சனல் லோன் ஆஃபர்கள், ஏடிஎம் பணப்பரிவர்த்தனை, ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் போன்ற அறிவுப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது எஸ்பிஐ கூறியிருக்கும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் அதிர்ச்சி செய்தி தான்.
குறைந்த மற்றும் நீண்ட கால வைப்பு தொகை மீதான வட்டி வீதத்தை 0.50% வரை எஸ்பிஐ வங்கிகுறைத்துள்ளது. ஒருபக்கம் ஆர்பிஐ யின் ரெப்போ வங்கியின் மாற்றத்தால் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ இந்த முறை வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் கையை வைத்து விட்டது.
இரண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சி கொண்ட வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.75%-லிருந்து 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வைப்பு தொகை காலம் மீதான மூத்த குடிமக்களுக்கான வட்டி வீதமானது 6.75%-மாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 40 முறை பணம் எடுக்கலாம்! சூப்பர் நியூஸ்ல
இந்த மாற்றமானது ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.