எஸ்பிஐ சேமிப்பு கணக்கு – மொபைல் நம்பர், மெயில் ஐடியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி தெரியுமா?
SBI Online Account Update : எஸ்பிஐயின் அருகிலுள்ள கிளைக்கு சென்று மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களையும் புதுப்பிக்கலாம். ஆனால், நீங்கள் அங்கே உங்கள் அடையாள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
By: WebDesk
Updated: February 25, 2020, 04:31:56 PM
SBI Online Account Update
How To Update Mobile Number, Email ID: எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லதாவர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு எண்ணற்ற வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். குறிப்பாக சேமிப்பு கணக்கு. இந்நிலையில், உங்களுடைய சேமிப்புக் கணக்கில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை எப்படி மாற்றுவது என்பது குறித்து உங்களுக்கு விளக்கும் செய்தி இது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் உங்களுடைய சேமிப்புக் கணக்கில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை மாற்றிவிட்டீர்களா? ஆம் எனில், அவற்றை உங்கள் வங்கியில் புதுப்பித்தீர்களா? இல்லையென்றால், உடனடியாக செய்யுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தங்கள் சேமிப்பு வங்கி கணக்குடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க இது உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை எப்போது நடக்கிறது என்பதை அறியவும் உதவும். மேலும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலேயே அனைத்து OTP, PIN செயல்படுத்தும் செய்திகளையும் பெறுகிறோம். எனவே, உங்கள் மொபைல் எண் வங்கியுடன் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ₹ 10,000 க்கு மேல் திரும்பப் பெற முடியாது, ஏனெனில் வங்கி ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் திரும்பப் பெறுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Have you changed your mobile number or email id?
If yes, please update it in the bank records so you don’t miss out on any of our important communication. pic.twitter.com/Qt8vKh0XXZ
இது குறித்து எஸ்பிஐ வங்கி டுவிட்டர் பக்கத்தில், தனது வாடிக்கையாளர்களுக்கு, தயவுசெய்து உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வங்கி பதிவுகளில் புதுப்பிக்கவும், எனவே எங்கள் முக்கியமான எந்த தகவலையும் நீங்கள் இழக்க மாட்டீர்கள்” என்று டுவிட் செய்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை மாற்ற அல்லது புதுப்பிக்க பின்பற்ற வேண்டிய முறை குறித்து வழிகாட்டப்பட்டுள்ளது.
முதலில் உங்கள் எஸ்பிஐ இணைய வங்கி கணக்கில் உள்நுழையுங்கள்.
பின்ன்ர், ‘தனிப்பட்ட விவரங்கள் / மொபைல்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, விரைவு தொடர்பு என்பதைக் கிளிக் செய்து, திருத்து ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.
புதிய மொபைல் எண் அல்லது புதிய மின்னஞ்சல் ஐடியை உள்ளீடு செய்யவும்.
இப்போது OTP ஐ உருவாக்கி, உங்கள் பழைய பதிவு எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளீடு செய்யவும்.
அடுத்து, சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
எஸ்பிஐ மொபைல் பயன்பாடு வழியாக மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு மாற்றுவது
முதலில் நீங்கள் எஸ்பிஐ மொபைல் பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும்.
மெனு தாவலில் இருந்து, ‘எனது சுயவிவரம்’ என்பதற்குச் சென்று திருத்து ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போது OTP ஐ உருவாக்கி, பழைய பதிவு எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளீடு செய்யவும்.
புதிய மொபைல் எண் / மின்னஞ்சல் ஐடியை உள்ளீடு செய்யவும்.
இப்போது, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
எஸ்பிஐ கிளைகளில் உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு புதுப்பிப்பது
எஸ்பிஐயின் அருகிலுள்ள கிளைக்கு சென்று மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களையும் புதுப்பிக்கலாம். ஆனால், நீங்கள் அங்கே உங்கள் அடையாள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மிகவும் எளிது உடனடியாக எஸ்பிஐ வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை உடனே புதுப்பித்துக்கொள்ளுங்கள்.