sbi savings account interest sbi savings account sbi எந்த வங்கியில் சேமிப்பு கணக்குக்கு அதிகமான வட்டி தரறாங்க என்ற தகவலை தான் இங்கே பார்க்க போகிறீர்கள்.
Advertisment
ஹெச்டிஎப்சி வங்கி
வங்கி சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கு 3.25 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படும், ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவான இருப்புகளுக்கு. அதே நேரம் ரூபாய் 50 லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு (ரூபாய் 500 கோடி வரை) இது 3.75 சதவிகிதம்.
ஐசிஐசிஐ வங்கி
சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் வழங்கப்படும், நாள் கணக்கு இருப்பு ரூபாய் 50 லட்சத்திற்கும் குறைவானதற்கு. அதே சமயம் ரூபாய் 50 லட்சத்திற்கும் அதிகமான இருப்புகளுக்கு 3.75 சதவிகிதம் நாள் கணக்கு இருப்பு.
sbi savings account interest : பாரத ஸ்டேட் வங்கி
வங்கி சேமிப்பு வைப்புகளுக்கு வட்டி விகிதம் 2.75 சதவிகிதம் வழங்கப்படும், ரூபாய் ஒரு லட்சம் வரையிலான இருப்புகளுக்கு. மேலும் ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கு தற்போது 2.75 சதவிகிதம் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப பரோடா
சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் நாள் கணக்கு ரூபாய் ஒரு லடசத்துக்கும் குறைவான கணக்கு இருப்புகளுக்கு. மேலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு 3 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கணிசமாக குறைத்து வரும் சூழலில், வங்கிகளின் நிதி செலவு எப்படியும் குறைந்து வருகிறது. விகிதங்கள் மேலும் குறைந்துவிட்டால், வைப்புத்தொகையாளர்கள் மாற்று சேமிப்பு விருப்பங்களைத் தேட வேண்டும், அவை சமமாக பாதுகாப்பானவையாக மற்றும் உடனடி பணப்புழக்கத்தை வழங்கும் விதமாக இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil