PMJDY SBI, PMJDY Sbi Bank, PMJDY SBI News, PMJDY Sbi tamil news, PMJDY ஸ்டேட் வங்கி, PMJDY பாரத ஸ்டேட் வங்கி, PMJDY எஸ்.பி.ஐ
SBI Savings Account : இன்றைய நடுத்தர மக்களின் மிகப் பெரிய கவலை பணத்தை எப்படி சேமிப்பது என்பது தான். மாத வருமான வாங்கும் பலரும் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம், அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டம் போன்றவற்றை தான் நாடி செல்கின்றனர். அப்படி உங்கள் பணத்தை சேமிக்க சூப்பர் டூப்பர் திட்டம் தான் இந்த ரூ. 321 திட்டம்.
Advertisment
பாரத ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ), அதன் துணை நிறுவனமான எஸ்பிஐ லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புற மக்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமீன் சக்தி என்ற காப்பீட்டுத் திட்டம் நலிவடைந்த பிரிவினருக்கான காப்பீட்டுத் திட்டமாகும்.இதன்படி இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்பவர்கள் தினசரி ஒரு ரூபாய் மட்டுமே காப்பீடு கட்டணமாக (பிரீமியமாக) செலுத்த வேண்டும்.இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு பிரீமியத் தொகை ரூ.361. ஐந்து ஆண்டுகளுக்கு இதைத் தேர்வு செய்யலாம். காப்பீட்டுத் தொகை ரூ. 30 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு வரை குறைத்துள்ளது.வைப்பு நிதிக்கான வட்டி 46 முதல் 90 நாட்கள் வரை 4.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.இதே போல் 180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி 6.25% இல் இருந்து 6% ஆக குறைத்துள்ளது. ஒரு வருடத்திற்கும் அதிகமான வட்டி விகிதம் கால் விழுக்காடு குறைந்து 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு சேவை திட்டம் :
வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி எஸ்பிஐ வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.