sbi saving account scheme : இனி வரும் காலங்களில், பொருளாதார நிலைமை எந்தளவுக்கு இருக்கும் என்பதை வல்லுனர்களாலே தெளிவாக கணிக்க முடியவில்லை. எதற்கும் தயார் என்ற நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதுநாள் வரை சேமிப்பில் அக்கறை காட்டவில்லை என்றாலும், இனியாவது சேமிக்கப் பழகுங்கள்.
வங்கிகளில் நாம் தொடரும் கணக்குகளில் எத்தனை விதமான சேமிப்புகள் உள்ளன என்பதை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி வைத்திருக்கும் தொடர் வைப்பு நிதி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?
இதோ தொடர் வைப்பு நிதி பற்றி முக்கிய தகவல்கள்:
1. எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு நிதி. வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
2. இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
3. இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும்.
4. மாதம் ரூ. 10 முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.
5. குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.
தொடர் வைப்புநிதி கணக்கை திறக்கத் தேவையானவை
எஸ்.பி.ஐ அல்லது இந்தியா அஞ்சலில் கணக்கை திறக்க, கே.ஒய்.சி (KYC -Know your customer) தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாகத் தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும். நீங்கள் ஏற்கனவே எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம் எளிதில் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். எனவே தொடர் வைப்புநிதி கணக்கை துவங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம். எந்தவொரு தனிநபரும் இந்த இரு நிறுவனங்களிலும் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்குகளும் அனுமதிக்கப்படுகின்றன. தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். 10வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.