sbi savings bank account sbi savings : எஸ்பிஐ வங்கியில் இதுவரை அக்கவுட் ஓபன் செய்யாதவர்கள் இந்த தகவலை முழுமையாக படியுங்கள். இதோ உங்களுக்கான பொன்னான வாய்ப்பு இது. சேமிப்பு கணக்கு தொடங்கி வருமானம் பாருங்கள்.
Advertisment
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சேமிப்பு கணக்குகளின் வாயிலாகவே நல்ல வட்டி கொடுப்பதற்கு சேவிங்ஸ் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சேவிங்ஸ் பிளஸ் திட்டம் என்பது டெபாசிட் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம். இதன் கீழ் சேமிக்கப்படும் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான தொகை ஆட்டோமேட்டிக்காக கால டெபாசிட்டுகளாக (Term deposit) மாற்றப்படும். உங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தில் மிகைத் தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பரிமாற்றப்பட்டு அதன் மூலம் வருமானம் கிடைக்கும். இதில் எந்தவிதமான ரிஸ்கும் கிடையாது.
எஸ்பிஐ சேவிங்ஸ் பிளான் கணக்கு துவங்குவதற்கு ஆதார் உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்கள் தேவை. தனியாகவும், ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியும் உண்டு. சேமிப்புக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு போக வேண்டும் என்பதையும் முன்கூட்டியே குறிப்பிட வேண்டும்.
1-5 ஆண்டுகள் டெபாசிட் காலம், டெபிட் கார்டு, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், எஸ்.எம்.எஸ் அலர்டுகள், ஆண்டுக்கு 25 இலவச செக், பாஸ் புக் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், மாத சராசரி பேலன்ஸ் தொகையும் பராமரிக்க தேவையில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil