தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல நன்மைகள் ஏற்பட்டாலும், ஆன்லைனில் மக்கள் தங்களது பணத்தை இழக்கும் நிகழ்வும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் சமீப காலங்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துகொண்டே உள்ளன. பல நாள்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, ஒரு போன் காலில் நூதனமான திருடிவிடுகின்றனர். அவர்கள் குறித்து காவல் துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வீடியோவுடன் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சிலர் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற விவரங்களைக் கேட்கின்றனர். வாடிக்கையாளர்கள் அதை வழங்கிவிட்டால் அதை வைத்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடிவிடுகின்றனர். வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தி இடம்பெற்றுள்ளது.
Sharing is not always caring.
— State Bank of India (@TheOfficialSBI) November 19, 2021
SBI says never share your bank details & ATM or UPI PINs with anyone. #SafetyFirstWithSBI#SafetyFirstWithSBI #SBI #StateBankOfIndia #StaySafe #StaySecure #BeAlert #CyberSafety #CyberSecurity pic.twitter.com/xAohwXp36P
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ்பிஐ, ”ஷேரிங் என்பது கேரிங் இல்லை” ஏடிஎம் PIN நம்பர், UPI நம்பர் , வங்கி விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும், பணம் இழப்பு நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்!!!
மோசடி சம்பவங்கள் குறித்து வங்கிகள் எப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், வாடிக்கையாளர்கள் பலரும் விபரம் தெரியாமல் மோசடி நிகழ்வுகளுக்கு ஆளாகி விடுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil