By: WebDesk
Updated: February 22, 2021, 01:49:49 PM
sbi sbi announcment sbi account sbi
sbi sbi announcment sbi account sbi : SBI வாடிக்கையாளர்கள் உடனடி கடன் (Loan) என்பது பற்றிய லிங்க் ஏதேனும் தென்பட்டால் அதை கிளிக் செய்யவேண்டாம்
மோசடி உடனடி கடன் ஆப்ஸ்களில் ஜாக்கிரதை! அங்கீகரிக்கப்படாத லிங்க்ஸ்களைக் கிளிக் செய்யாதீர்கள் மேலும் எந்தவொரு நிறுவனத்திற்கும் உங்கள் வங்கி சார்ந்த விவரங்களை வழங்க வேண்டாம்.” வெறும் ஐந்து நிமிடங்களில், உங்களுக்கு கடன் கிடைக்கும். ஆவணங்கள் தேவையில்லை… உடனே கிளிக் செய்யுங்கள்.. போன்ற மெசேஜ் வந்தால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
“SBI Home Top Up Loan” என அறியப்படும் இந்த சலுகையின் கீழ், இணையத்தில் இந்த கடனை வெறும் 4 கிளிக்குகளில் பெறலாம். இந்த கடனை மிக எளிதாக பெற, நீங்கள் SBI YONO மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது மட்டுமல்லாது யாராவது கடன்களைப் பெற விரும்பினால், ஒருவர் நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டும் அல்லது அவர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்க வேண்டும், பிறகு வங்கியின் சட்ட திட்டங்களுக்கு CIBIL ஸ்கோர் அடிப்படையில் நீங்கள் தகுதியானவர் என்றால் வாடிக்கையாளருக்கு தொந்தரவில்லாத கடன் வழங்கப்படும் என்றும் SBI கூறியுள்ளது.
கடன் வழங்கல் பற்றிய அனைத்து விவரங்களும் SBI வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன, கடன் பெறுவது பற்றிய சந்தேகம் இருந்தால் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைக்கலாம். அழைத்து கடன்களைப் பற்றி மேலும் அறியலாம் என்று SBI கூறியுள்ளது.