SBI, sbi bank atm, sbi atm, sbi atm withdrawal, sbi atm fee, SBI online, SBI ATM Card, SBI ATM card fees, SBI Saving account, Punjab National Bank, pnb IMPS charges, PNB Internet Banking, PNB Banking
இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளன. எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான வரம்பை 30 ஜீன் 2020 வரை தள்ளுபடி செய்துள்ளது. இப்போது எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலம் 30 ஜுன் 2020 வரை பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. அதே போல் பிஎன்பி வங்கியும் PNB IMPS கட்டணங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரணத்தை கொடுக்கும் விதமாக இரண்டு வங்கிகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எஸ்பிஐ தனது சொந்த ஏடிஎம்களை மட்டுமல்லாமல் பிற வங்கி ஏடிஎம்களையும் வரம்பற்ற முறையில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இனிமேல் எஸ்பிஐ ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு பணம் எடுக்க எந்தவித கூடுதல் கட்டணமும் கிடையாது. எனினும் எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறை 30 ஜூன் 2020 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஜீலை 1, 2020 முதல், முதல் அடுக்கு நகரங்களில் (Tier-1 cities) உள்ள வாடிக்கையாளர்கள் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர். அதே போல் பிற நகர்ப்புற மற்றும் கிராமப்புற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு 5 முறை மட்டுமே. எஸ்பிஐ ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு (minimum balance) வரம்பை தள்ளுபடி செய்துவிட்டது.
Advertisment
Advertisements
எஸ்பிஐ யின் அடிச்சுவடுகளை பின்பற்றி பிஎன்பி யும் தனது PNB IMPS (Immediate Payment Service) கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. இணைய வழி வங்கி சேவை மற்றும் கைபேசி வங்கி ஆப் (Mobile Banking App) மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு IMPS கட்டணம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது, என பிஎன்பி வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மூலம் இந்த முடிவை அறிவித்துள்ளது. பிஎன்பி வாடிக்கையாளர்கள் இப்போது PNB IMPS மூலம் ரூபாய் 50,000/- வரை பணத்தை எந்தவித கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil