/tamil-ie/media/media_files/uploads/2021/02/444-Copy.jpg)
indian bank ifsc ib ifsc code indianbank
sbi sbi card sbi atm card sbi state bank card : இந்தியன் ஆயில் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ரூபே டெபிட் கார்டை அறிமுகம் செய்து உள்ளது.இந்த டெபிட் அட்டையின் மூலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்களில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூ.200 தொகைக்கு பரிசு புள்ளி உண்டு.
இந்தியன் ஆயில் எரிபொருள் பெட்ரோல் வாங்கியதற்கு, கார்டு தாரருக்கு 0.75% மதிப்புள்ள லாயல்ட்டி புள்ளிகள் கிடைக்கும்.
ஒரே மாதத்தில் ரூபாய் 5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனையை கான்டாக்ட்லெஸ் கார்டு மூலம் டாப்அப் செய்து மேற்கொள்ளலாம்.
விருந்து, திரைப்படம், மளிகை மற்றும் பயன்பாட்டு பில்களுக்கு இந்த கார்டு மூலம் செலவழிக்கும் போதும் பரிசு புள்ளி கிடைக்கும். விருந்து, திரைப்படம், மளிகை மற்றும் பயன்பாட்டு பில்களுக்கு செலவு செய்யும் போது இந்தப் பரிசு புள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெட்ரோல் வாங்குவதற்கு மாதாந்திர உச்ச வரம்பு எதுவுமில்லை .ரொக்கம் இல்லா பரிமாற்றம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னோடியாக இந்தியன்ஆயில் திகழ்கிறது. பரந்து விரிந்த இந்தியன்ஆயிலின் 98% விற்பனையகங்களில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் பங்க்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வேலட் பேமென்ட்கள் ஏற்கப்படுவது என்பது இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு திட்டத்திற்கு இணங்க அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் அப் செய்து பணம் செலுத்துதல் என்கிற தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் இணைந்த பல்வகை சலுகைகள், பெட்ரோல் டீசல் வாங்கும் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியான வாங்குகிற அனுபவத்தை அளிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.