Advertisment

SBI Loans: இந்த நேரம் அக்கம் பக்கத்தினர் உதவ மாட்டாங்க... உங்க வங்கி கை கொடுக்கும்!

SBI loan : நெருக்கடியால் அவதிப்படும் சம்பளதாரர்களுக்காக எஸ்பிஐ முன் ஒப்புதலுடன் கூடிய தனிநபர் கடன்களை வழங்க உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI, sbi loan, corona virus, personal loan, salaried people, customers, sbi loan for salaried,sbi emergency loan scheme,SBI new personal loan, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

SBI, sbi loan, corona virus, personal loan, salaried people, customers, sbi loan for salaried,sbi emergency loan scheme,SBI new personal loan, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

SBI News: பண நெருக்கடியால் அவதிப்படும் சம்பளதாரர்களுக்காக எஸ்பிஐ முன் ஒப்புதலுடன் கூடிய தனிநபர் கடன்களை வழங்க உள்ளது.

Advertisment

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தற்போது எந்த அவசர கடன் திட்டங்களையும் Yono ஆப் மூலம் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக பண புழக்க சிக்கலில் உள்ள சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக YONO ஆப் மூலம் விரைவில் முன் ஒப்புதலளிக்கப்பட்ட (pre-approved) தனி நபர் கடன்களை அறிமுகப்படுத்தப் போவதாக எஸ்பிஐ கூறியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

YONO’ மூலமாக எஸ்பிஐ அவசர கடன் திட்டம் என்ற செய்தி பரவலாக்கப்பட்டதன் விளைவாக, எஸ்பிஐ தற்போது இது மாதிரியான எந்த கடன்களையும் வழங்கவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என வங்கி ஒரு அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், கோவிட் காரணமாக பண புழக்க சிக்கலில் உள்ள சம்பளம் வாங்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்காக YONO மூலமாக முன் ஒப்புதலுடன் கூடிய ஒரு தனிநபர் கடனை விரைவில் அறிமுகப்படுத்தும் செயல்முறையில் வங்கி உள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதிய தயாரிப்பு தொடர்பான விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என எஸ்பிஐ கூறியுள்ளது.

எஸ்பிஐ தனது marginal cost of funds based lending rate (MCLR) ஐ 15 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது மேலும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு திட்டத்தை அதிக வட்டி விகிதத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளதாக, வியாழக்கிழமை கூறியுள்ளது. எஸ்பிஐ யின் MCLR 7.40 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 7.25 சதவிகிதமாக சரிந்துள்ளது இதன் காரணமாக MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வீட்டு கடன் தவனைகள் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வீழ்ச்சி விகித முறையில் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க சில்லறை கால வைப்பு பிரிவில் மூத்த குடிமக்களுக்காக 'SBI Wecare Deposit' என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தயாரிப்பின் கீழ், '5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அளவுள்ள சில்லறை கால வைப்புத்தொகைகளுக்கு கூடுதலாக 30 அடிப்படைப் புள்ளிகள் பிரீமியம் மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment