எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் FASTag பெறுவது எப்படி?

SBI FasTag Sticker Online : SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வாடிக்கையாளர்கள், FASTag அட்டையை, வங்கியில் ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட முறைகளில் வாங்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

By: Updated: December 3, 2019, 02:21:37 PM

SBI FasTag News, How To Buy SBI Free FasTag For Cars : SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வாடிக்கையாளர்கள், FASTag அட்டையை, வங்கியில் ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட முறைகளில் வாங்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களை கடக்க FASTag முறை, டிசம்பர் 15ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் FASTag முறையில், டோல்கேட்டில் வாகனங்கள் நிற்காமல் பயணிக்க ஏதுவாகிறது.

FASTag அட்டை பெறாமல், FASTag லைனில் பயணிக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த FASTag அட்டைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட டோல்கேட்கள், ஐசிஐசிஐ , ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள், பாயின்ட் ஆப் சேல் மையங்கள், அமேசான், பேடிஎம் பேமெண்ட் உள்ளிட்டவைகளின் மூலம் நாம் வாங்கிக்கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் FASTag அட்டையை எவ்வாறு பெறுவது?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், FASTag ஆன்லைனில் பெறுவதற்கு வசதியாக, fastag.onlinesbi.com என்ற பகுதியை, எஸ்பிஐ வங்கி துவக்கியுள்ளது. கேஒய்சி விபரங்கள், வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

லிமிடெட் கேஒய்சி விபரங்களின் அடிப்படையில், ஒரு ப்ரீபெய்ட் அக்கவுண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

முழுமையான கேஒய்சி விபரங்களின் அடிப்படையில், ஒரு ப்ரீபெய்ட் அக்கவுண்டுக்கு ரூ.1 லட்சம் வரை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

வங்கியுடன் FASTag அக்கவுண்டை ஓபன் பண்ணும் சமயத்தில், வாகனத்தையும் உடன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.SBI FASTag அட்டைக்கு 3 ஆண்டு காலம் வேலிடிட்டி தரப்படுகின்றது. இதன்மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் நிற்காமல், குறித்த நேரத்தில் சரியான சமயத்தில் நாம் நமது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம். SBI FASTagயை பயன்படுத்தி டோல்பிளாசாக்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 2.5 சதவீத கேஷ்பேக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாது, வாகனத்தை ஓட்டும் டிரைவருக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi sbi online banking sbi fastag state bank of india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X