ஸீரோ பாலன்ஸ்… அதிகபட்ச வரம்பும் இல்லை: எஸ்.பி.ஐ-யில் இந்தத் திட்டம் தெரியுமா?

SBI News In Tamil : சொந்த வங்கி ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம் மூலம், வங்கி கிளை மூலம் மற்றும் AEPS பண பரிமாற்றம் உட்பட மாதத்துக்கு நான்கு முறை பணம் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது,

SBI, SBI savings account, onlinesbi.com, SBI Savings account charges, SBI BSBD account, SBI net banking, SBI online, SBI BSBD account features, SBI BSBD account charges, SBI BSBD account account opening, SBI BSBD account withdrawal limit, SBI BSBD account transaction limit, SBI BSBD account details, Rupay debit card, Rupay debit card SBI
SBI, SBI savings account, onlinesbi.com, SBI Savings account charges, SBI BSBD account, SBI net banking, SBI online, SBI BSBD account features, SBI BSBD account charges, SBI BSBD account account opening, SBI BSBD account withdrawal limit, SBI BSBD account transaction limit, SBI BSBD account details, Rupay debit card, Rupay debit card SBI

SBI News: பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (SBI Basic Savings Bank Deposit Account) அல்லது SBI BSBD ஐ அறிமுகப்படுத்தியிள்ளது. இது பொதுவாக அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு என்று அறியப்படுகிறது. எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கிடைக்கும் அதே வட்டி விகிதம் இந்த SBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கும் கிடைக்கிறது. அதே சமயம் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தேவையில்லை, இலவச ஏடிம் அல்லது டெபிட் அட்டை போன்ற சில ஆடம்பரங்களும் கிடைக்கும். மிக முக்கியமாக இந்த SBI BSBD கணக்கில் அதிகபட்ச இருப்பு வைப்பதில் எந்தவித வரம்பும் இல்லை. இந்த SBI BSBD கணக்கை எஸ்பிஐ இணையவழி வங்கி சேவை மூலமாகவோ அல்லது எஸ்பிஐ ஆன்லைன் சேவை வழியாகவோ எஸ்பிஐ KYC தேவைகளை பூர்த்தி செய்துக் கொடுத்து திறக்கலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com மற்றும் sbi.co.in குறிப்பிடப்பட்டுள்ள SBI BSBD கணக்கின் அம்சங்கள் – கணக்கு வைத்திருப்பவருக்கு அடிப்படை RuPay ATM-cum-Debit card இலவசமாக வழங்கப்படும். மேலும் ஆண்டு பராமரிப்பு கட்டணங்கள் இல்லை. மின்னணு மற்றும் digital payment channels களான NEFT அல்லது RTGS மூலம் பணம் வரவு வைப்பதோ அல்லது பரிமாற்றம் செய்யவோ செய்தால் அதுவும் எஸ்பிஐ சேமிப்பு கணக்கை போல இலவசமாக மேற்கொள்ளப்படும்.

SBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவர் பெறும் SBI BSBD கணக்கு அம்சங்களின் பட்டியல்

1] அடிப்படை RuPay ATM-cum-Debit card இலவசமாக வழங்கப்படும் மேலும் எந்தவித வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் கிடையாது.
2] மின்னணு payment channels ஆன NEFT/RTGS மூலம் பணம் அனுப்பவோ அல்லது வரவு வைக்கவோ செய்வது முற்றிலும் இலவசம்.
3] மத்திய / மாநில அரசு வரையப்பட்ட காசோலைகளின் Deposit/ collection இலவசம்.
4] செயல்படாத கணக்குகளை செயல்பட வைக்க எந்த கட்டணமும் கிடையாது
5] கணக்கு மூடல் கட்டணங்கள் இல்லை
6] சொந்த வங்கி ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம் மூலம், வங்கி கிளை மூலம் மற்றும் AEPS பண பரிமாற்றம் உட்பட மாதத்துக்கு நான்கு முறை பணம் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது,
எனினும் SBI BSBD கணக்கு வைத்திருக்கும் ஒருவர் வேறு சேமிப்பு கணக்கை எஸ்பிஐ யில் வைக்க முடியாது.
SBI BSBD கணக்கை திறப்பதற்கான தகுதிகள்
செல்லத்தக்க KYC ஆவணங்கள் உள்ள அனைத்து தனிநபர்களும் BSBD கணக்கை திறக்க தகுதியானவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi sbi savings account onlinesbi com sbi savings account charges

Next Story
இந்தியன் வங்கி முக்கிய ‘கொரோனா’ அப்டேட்: தவணை, வட்டி கவலையை விடுங்க!indian bank, public sector banks, axis bank, state bank of india, personal loan, home loan, இந்தியன் வங்கி, பொதுத்துறை வங்கிகள் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெர்சனல் லோன், வீட்டுக்கடன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express