sbi sbi savings account sbi sbi account : எஸ்பிஐ வாடிக்கையாளர்களா நீங்கள்? அரசு தரும், மானியங்களை உங்களால் பெற முடியும் தெரியுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
அதாவது, உங்கள் ஆதார் எண்ணை முக்கியமாக இணைத்து விட வேண்டும்,
எப்படி?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற இணைய தளத்தில் சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு my accounts என்பதன் கீழ் உள்ள link your Aadhaar number என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து பதிவிட்டுக் கொள்ளவும். அங்கு உங்களது மொபைல் எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் தெரியும். அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்று, உங்காளது ஆதார் கார்டு ஆவணத்தினை அல்லது இ- ஆதாரினை கொடுக்கும். அதோடு letter of requetம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனைக் கொடுக்கும்போது, ஆதார் ஜெராக்ஸினையும் கொடுக்க வேண்டும். அவர்கள் அதனை உறுதிபடுத்திக் கொண்டு, பதிவு செய்வர். இதனை வங்கி அப்டேட் செய்த பிறகு, பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.
எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லுங்கள். உங்களது ஏடிஎம்மினை ஸ்வைப் செய்து, உங்களது பின் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மெனுவுக்கு சென்று, ஆதார் பதிவு என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது வங்கி கணக்கு சேமிப்பு கணக்கா அல்லது வேறு ஏதேனும் கணக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களிடம் ஆதார் எண்ணினை பதிவிட கேட்கும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்து கொள்ளவும். திரும்பவும் மறுமுறையும் பதிவு செய்ய கேட்கும். அதனை கொடுத்து பதிவு செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதனை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.