SBI sbi savingssbi savings account sbi: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள உதவும்,
பொதுவாக இன்றைய நாளில் வங்கிகளில் நமக்கு சாதமாக மிக பயனுள்ளதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று தான் டிஜிட்டல் சேவைகள். எனினும் டிஜிட்டல் சேவைகள் தான் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு உதவும்,
அதே சமயம், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி அறியவும் இது உதவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை ஏனெனில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடந்திருப்பதை சரியான நேரத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை