sbi sbiaccount sbi sbi bank account sbi sbi : .இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பருக்கு லிங்க் அனுப்பப்பட்டு, இதை கிளிக் செய்தால் சில நிமிடங்களில் உடனடிக் கடன் கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் வரும். இதில் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதில் மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. இந்த மாதிரியான லிங்குகளை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் காணாமல் போவதாகவும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான எஸ்எம்எஸ்களில் காகித வேலை எதுவும் இல்லாமல், உடனடியாக 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும் என்று கூறுவதால் வாடிக்கையாளர்கள் இந்த வலையில் விழுகின்றனர். நிதி நெருக்கடியில் இருக்கும் பலர் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் கடன் வாங்கி மாட்டிக்கொள்கின்றனர். கடன் வாங்கிய பிறகுதான் அளவுக்கு அதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருப்பதை உணர்கின்றனர் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கூறுகிறது. இதுபோன்ற வலையில் சிக்கி உயிரை விடும் நிலைக்கும் பலர் சென்றுள்ளனர்.
கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாமல், வட்டிக்கு வட்டி என பெரும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்களாகிய நீங்களும் சற்று கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருங்குகள். இதுப்போன்ற ஏமாற்று வேலைகளில் மாட்டிக் கொண்டு பனத்தை இழந்து வீடாதீர்கள்.