sbi sbionline sbi online account sbionline : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க வழி வகை செய்துள்ளது.
வங்கியின் onlinesbi.com அல்லது sbi.co.in ஆகிய வலைத்தளங்களில் சென்று சுலபமாக வங்கிக் கணக்கைத் திறக்க முடியும். இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் நீங்கள் வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.
எஸ்பிஐ டிஜிட்டல் கணக்கை எஸ்பிஐ சேமிப்புக் கணக்காக மாற்றலாம். எஸ்பிஐ அதன் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பெறலாம். எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை கூட்டுக் கணக்காக மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார். வாடிக்கையாளர் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை சாதாரண சேமிப்புக் கணக்காக மாற்றவும் அனுமதிக்கப்படுவார் என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர் எந்தவொரு எஸ்பிஐ கிளையையும் பார்வையிட்டு பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் வெற்றிகரமாக இ-கேஒய்சியை முடிக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கிற்காக வங்கியால் குறிப்பிடப்படக்கூடிய கேஒய்சி தேவைகள் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரே ஒரு எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு மட்டுமே இருக்க முடியும். அதாவது தகுதியான ஒவ்வொரு நபரும் ஒரு எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.