Advertisment

SBI- யின் இந்த திட்டம் கண்டிப்பாக உங்களுக்கு கைக்கொடுக்கும்!

வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கு உங்கள் வங்கி கணக்கை மாற்ற நீங்கள் செய்யவேண்டியது.

author-image
WebDesk
New Update
sbi online account state bank of india online

sbi online account state bank of india online

sbi scheme state bank of india scheme :பாரத ஸ்டேட் வங்கி கிளையை மாற்றுவது உட்பட பல வங்கி தொடர்பான பணிகளை ஆன்லைன் மூலமாக நீங்கள் முடித்துக் கொள்ள முடியும். சமீபத்தில் வீடு மாறியவர்களுக்கு இது உண்மையிலேயே மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Advertisment

முன்னர் நீங்கள் உங்கள் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு நேரடியாக சென்று ஒரு நீண்ட செயல்முறையை பின்பற்ற வேண்டியிருக்கும். குறிப்பாக ஆதார் அட்டையில் வீட்டு முகவரியை மாற்றுவது பின்னர் அதை வங்கி கணக்கோடு மற்றும் இதர முக்கியமான ஆவணங்களோடு இணைப்பது போன்று.

ஆனால் எளிதாக உங்கள் கணக்கில் logging in செய்வதன் மூலம் இப்போது உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கை ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

sbi scheme state bank of india scheme: ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கு உங்கள் வங்கி கணக்கை மாற்ற நீங்கள் செய்யவேண்டியது.

1. www.onlinesbi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சென்று உங்கள் ‘personal banking’ கணக்கில் username மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்

2. உங்கள் home screen லிருந்து, மேல் menu bar ல் உள்ள ‘e-Services’ என்ற தேர்வை தேர்ந்தெடுக்கவும்

3. “Transfer of Savings Account” என்ற தேர்வை தேர்வுச் செய்யவும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்தால் மாற்ற வேண்டிய வங்கி கணக்கை தேர்ந்தெடுக்கவும்.

5. எந்த வங்கி கிளைக்கு கணக்கை மாற்ற வேண்டுமோ அந்த கிளையின் குறியீடை (branch code) உள்ளீடு செய்யவும். தானாக வரும் வங்கி கிளையின் பெயர் சரிதான என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். அடுத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு சமர்பிக்கவும்.

6. பழைய வங்கி கிளை குறியீடுடன் புதிய வங்கி கிளை குறியீடை வைத்து கணக்கு மாற்றும் விவரங்களை சரிப்பார்க்கவும். இது முடிந்த உடன் உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு OTP வரும்.

7. அந்த OTP ஐ உள்ளீடு செய்து ‘confirm’ என்ற தேர்வை சொடுக்கவும். உங்களது வங்கி கிளை மாற்றும் கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வரும்.

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் (KYC) விவரங்களை பூர்த்தி செய்து, கைபேசி எண்ணை பதிவு செய்து, எஸ்பிஐ இணையவழி வங்கி சேவையை பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே ஒருவரால் வங்கி கிளை மாற்றத்தை ஆன்லைன் மூலம் செய்ய முடியும். வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றும் செயல்முறை ஒரு வாரத்திற்குள் நடைபெறும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment