எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. இந்த தகவல் உங்களுக்குத்தான்!

அடிப்படை வட்டி விகிதத்தை 9.05 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI
SBI

SBI  : பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சேவைகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

எஸ்.பி.ஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் படி புதிதாக வீடு கட்ட, அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 8% வட்டி வசூலிக்கப்படும். இந்த சிறப்பு வட்டி சலுகை, முதல் வருடத்திற்கு மட்டும் பொருந்தும். அதற்கு பிறகு கடன் வாங்கும் திட்டத்தை பொருத்து கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்.

இனி கவலையே இல்லை…பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா?

இந்த வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களும், புதிய திட்டத்தின் சலுகையை பெறலாம். இவர்கள் ஏற்கனவே வாங்கிய மொத்த கடனில் 10% கடன் தொகைக்கு மட்டுமே, ( அதிகபட்சம் ரூ.5 லட்சம்) இந்த சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.

தற்போது ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுக்கும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு வேறு வேறு வட்டி வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கும் சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.

இதே போல் சிறு நடுத்தர தொழில் பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கடனுக்கும் ஒரு வருடத்திற்கு சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும். இந்த கடனுக்கு 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.

எஸ்.பி.ஐ -யில் அட்டகாசமான கார் லோன்.. இதுதான் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க

எஸ்.பி.ஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தினை 0.05 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்துடன் சேர்த்து பிரைம் கடன் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 13.80 சதவீதமாகவும், அடிப்படை வட்டி விகிதத்தை 9.05 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi schemes and benefits

Next Story
ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்புelection 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com