SBI Senior Citizen FD Interest Rates | Sbi Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட்கள் முதலீட்டாளர்களிடையே பிரபலமாக உள்ளன. அவர்கள் தங்கள் முதலீடுகளிலிருந்து உத்தரவாதமான வருவாயை எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களுக்கு தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பாதவர்கள், சந்தை அல்லாத திட்டங்களை விரும்புகிறார்கள்.
மூத்தக் குடிமக்கள் மத்தியில் ஃபிக்ஸட் டெபாசிட்கள் பிரபலமாக இருப்பதற்கு இதுவே காரணம். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
அந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மூத்த குடிமக்களுக்கு 1 வருட எஃப்.டிக்கு 7.30%, 2 வருட எஃப்.டிக்கு 7.25% மற்றும் 5 வருட எஃப்.டி-க்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தற்போது, ஒவ்வொரு திட்டத்திலும் ஒருவருக்கு ரூ.5 லட்சம் முதலீடு என்ன உதவும் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஓராண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்
எஸ்.பி.ஐ-யில் 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டில், ரூ. 5 முதலீடு செய்தால் ஒருவர் ரூ. 37,511 வட்டியாகப் பெறுவார், அதே சமயம் ஒரு வருட காலத்திற்குப் பிறகு அவர்களின் முதிர்வுத் தொகை ரூ. 5,37,511 ஆக இருக்கும்.
3 ஆண்டு கால டெபாசிட்
3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டில் 7.25 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு முதலீட்டாளர் ரூ.1,20,273 வட்டியைப் பெறுவார். அவரின் முதிர்வுத் தொகை ரூ.6,20,273 ஆக இருக்கும்.
5 ஆண்டு கால டெபாசிட்
5 ஆண்டு எஃப்.டி-யில் 7.25 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு முதலீட்டாளர் ரூ. 2,24,974 வட்டியைப் பெறுவார். அவரின் முதிர்வுத் தொகை ரூ. 7,24,974 ஆக இருக்கும்.
மூத்தக் குடிமக்கள் எஃப்.டி
எஸ்பிஐ சீனியர் சிட்டிசன் எஃப்டியில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.2,24,974 வரை வட்டி பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“