இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமான நிலையிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.13 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.514க்கு வணிகமாகின. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதலாம் காலாண்டு அறிக்கை வெளியானது. அதில் வங்கி 7 சதவீதம் நிகர லாபத்தை இழந்திருப்பது தெரியவந்தது.
இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கம் முதலே மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) எஸ்பிஐ பங்குகள் 3.13 சதவீதம் வரை சரிவை கண்டு ரூ.514 என வர்த்தகமாகின.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் எஸ்பிஐ பங்குகள் 3.23 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.513.85க்கு வணிகமாகின. நடப்பு நிதியாண்டில் முதலாம் காலாண்டில் எஸ்பிஐ வங்கி பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன.
தற்போது வங்கியின் நிகர லாபம் ரூ.6,068 கோடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் வங்கியின் ஒட்டுமொத்த வருமானமும் ரூ.74,998.57 கோடியில் இருந்து ரூ.77,347.17 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம்
இதற்கிடையில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தை தொடங்கின.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 466.14 (0.80%) புள்ளிகள் உயர்ந்து 58,853.07 என வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 127.60 (0.73%) புள்ளிகள் அதிகரித்து 17,525.10 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“