SBI Fixed Deposits: மூத்தக் குடிமக்களின் சிறந்த முதலீட்டு விருப்பமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் டெபாசிட் காலம் மற்றும் வங்கிகள் பொறுத்து ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யை பொறுத்தமட்டில் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்குகின்றது.
அந்த வகையில் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம், எஸ்.பி.ஐ வீ கேர் உள்ளிட்ட திட்டங்கள் முன்னணியில் உள்ளன. இது தவிர சிறப்பு எஃப்.டி.களும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ளன.
இதிலும் எஸ்.பி.ஐ வீகேர் திட்டம் மக்கள் மத்தியிவ் நல்ல வரவேற்பினை பெற்ற திட்டமாகும். இந்தத் திட்டம் தற்போது செப்.30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்பிஐ-யை பொறுத்தமட்டில் மூத்தக் குடிமக்களுக்கு 50 விழுக்காடு அதிகம் வட்டி அளிக்கின்றனர். 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்க 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். இது தவிர எஸ்பிஐயில் அம்ரித் கலாஷ் போன்ற சிறப்பு எஃப்டி திட்டங்களும் உள்ளன.
அஞ்சலகங்களை பொறுத்தமட்டில் ஆர்.டி.க்கு 6.5 சதவீதம் வட்டி வழங்குகின்றன. இதில் அதிகப்பட்சமாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி நிறுவனங்கள் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
மஹிந்திரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
மஹிந்திரா வங்கி தற்போது 23 மாத காலப்பகுதியில் உள்ள எஃப்.டி முதலீட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% மற்றும் பொது மக்களுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் நேற்று (செப்.13) முதல் அமலுக்கு வந்துள்ளன.
மேலும் வங்கியில், 180 நாள்கள் நிலையான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு, வங்கி 7.00% வட்டியை கொடுக்கும். தொடர்ந்து, 181 நாள்களில் இருந்து 363 நாள்களுக்கு முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு, கோடக் மஹிந்திரா வங்கி 6.00% வட்டி விகிதத்தை வழங்கும்.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
இதேபோல் மற்ற வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக, ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் நல்ல வட்டி வழங்குகின்றன. எஃப்.டி.களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“