Sbi Fixed Deposit | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல நிதிச் சேவைகளை வழங்குகிறது. தனித்துவமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களும் இதில் அடங்கும்.
அந்த வகையில், எஸ்.பி.ஐ தற்போது இரண்டு வரையறுக்கப்பட்ட கால எஃப்.டி திட்டங்களை வழங்குகிறது. இதில், மற்ற திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் 'வீ-கேர் டெபாசிட்' மற்றும் 'அம்ரித் கலாஷ் வைப்புத் திட்டம்' ஆகும். இந்தத் திட்டங்கள், 2024 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
எஸ்.பி.ஐ வீ-கேர் டெபாசிட் திட்டம்
இந்தத் திட்டம் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கானது. இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகளாகவும், அதிகப்பட்ச காலம் 10 ஆண்டுகளாகவும் உள்ளது.
இந்தத் திட்டத்தில், 60 வயதுக்குட்பட்டவர்களும் முதலீடு செய்யலாம். இவர்கள், மூத்த குடிமக்களை விட குறைந்த வட்டியைப் பெறுவார்கள்.
வட்டி விகிதம்
சாதாரண குடிமக்கள் 6.5 சதவீதம்
மூத்தக் குடிமக்கள் 7.5 சதவீதம்
எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் டெபாசிட்
எஸ்.பி.ஐ வழங்கும் இந்தச் சிறப்பு திட்டத்தின் கால அளவு 400 நாள்கள் ஆகும். திட்டத்திற்கான வட்டி ஆண்டுக்கு 7.10 சதவீதம் ஆகும்.
இந்த எஃப்.டி திட்டத்தில் முதலீட்டாளர் கடன் பெறும் வசதி உள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டத்தில் 7.60 சதவீத வட்டி வழங்ப்படுகிறது. இந்தத் திட்டங்கள் மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“